Sunday, 28 December 2025

இரத்தம்

இரத்தம்.

பிறந்த பொழுதிலே பிறந்த பாசங்கள

வளர்ந்த பாதையில் கலைந்த வேஷங்கள்.

இரத்தம் ஒன்றிலே உதித்த உறவுகள் 

பிரிந்து சிதைவதோ அண்ணன் தம்பிகள்!


துணைக்குத் துணையாய் வாழத் தானடா!

நினைத்துப் பெற்றாள் அன்னை அவளடா!

அண்ணன் தம்பியாய் இணைந்த உறவுகள் 

மண்ணு வாசல்களாய் பிரிந்ததும் ஏனடா!


உரிமைகள் மாறும் மண்பொருளுக் காக

பிறவிகள் பாசம் தான்பலி யாச்சோ!

பங்காளி என்றால் பகையாளி தானோ!

சங்கதி இதுவானால் சகோதரர் எதற்கோ!


தாயின் மார்பிலே குடித்த பாலுக்கு 

தன்னுரிமைச் சண்டைகள் செய்தோமா!

தாயின் வயிற்றிலே வாழ்ந்த  கருவறை,

 தனித்தனி பங்கும் பிரித்தளந் தோமா!


ஒற்றுமை சொல்லியே தாய் ஊட்டி வளர்த்தாள்.

வேற்றுமை இன்றியே விளையாடி மகிழ்ந்தோம்.

நாய்களின் குணமோ தெருச்சண்டை ஏனோ!

தாய்ப்பால் இரத்தம் சிந்திட லாமோ!


குடும்பங்கள் ஆனது குலம் பெருகத் தானே!

கோடுகள் பிரிக்கும் பாகங்கள் எதற்கோ!

தாயவள் போலவே தாரமும் அணைத்தால்

 சேய்களாய் மீண்டும் சோதரர் ஆவோம்.


கொ.பெ.பி.அய்யா.



Saturday, 27 December 2025

மலையாம் மலையாம் சாமி மலையாம்

மலையாம் மலையாம் சாமி மலையாம்
 மலையாம் மலையாம் சாமி மலையாம்
ன சாமி சபரி மலையாம்__அது
ஐயப்பன் வாழும் மா மலையாம்__அந்த
மெய்யப்பன் தானருள் செய்யப்பனாம்.

விரத மிருந்து இருமுடி கட்டி
வரம் பெற ஐயனின் கோவிலை நாடி
வாபரைத் தொழுது சாபங்கள் கலைந்து
வழிப் பயணம் தொடர்வோம் விழைந்து.

ஏற்றங்கள் ஏறி ஆறுகள் மூழ்கி
பாவங்கள் கழுவி பம்பா நீங்கி
சாமிகள் கூடி சரணம் பாடி
சத்தியப் பயணம் சாஸ்தாவைத் தேடி.

விசாக மாதம் மண்டல பூஜை
விரதமிருந்து கண்டிட ஆசை.
நெய்யபிசேகம் செய்திடும் வாசம்.
வைகாசி நாளில் தொடங்கிடும் கோசம்.

உசபூஜை உச்ச பூஜை படிபூஜை என்று
உவந்து கண்டு அத்தாழ பூஜையும்  அடைக்கும் முன் நடைவாசல் நின்று
ஐயனின் அருளைப் பெறுவோம் மகிழ்ந்து

பந்தள ராஜன் பால்முக வாசன்
கந்தன் சகோதர கருணை பூசன்
உறுவினை யாவும் அவனால் அகன்று
பிறவிப் பயனை அடைவோம் நெகிழ்ந்து.

கார்த்திகை மாதம் நேர்த்தியாய் விரதம்
சாஸ்தாவைக் காண சபரிக்குப் பயணம்.
ஏழுமலை களும் ஏழு பிறவிகளாம்
அழுதா நதியில் கழுவிக் கடப்போம்.

தைத் திங்கள் முதல் நாள் பொன்னம்பலம் மேட்டில்
மகர ஜோதியாய் ஐயப்பன் தரிசனம்
தவர விடலாமோ  நெய்யப்பன் கரிசனம்.

ஐயப்பனை நம்பினார்கு ஐயமில்லை
மெய்யப்பன் சன்னதியே எல்லை.
சாமிசரணம் சொன்னாலே போதுமே
சங்கடங்கள் தீர்ந்தெல்லாம் சுபமாகுமே.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.



Wednesday, 17 December 2025

சாமிகளே சாமிகளே

சாமிகளே சாமிகளே 

சாமிகளே சாமிகளே சரணம் சொல்லுங்க.
சபரிமலை பாட்டுப் பாடி ஆட்டம் போடுங்க. 
ஐயப்பா ஐயப்பா கைகள் தட்டுங்க.
ஆடிப் பாடி தாளம் கொட்டிப் பாட்டுப்
பாடுங்க.

குதுகலமா கொண்டாட்டமா கோசம் 
போடுங்க.
கூட்டமாகக் கூடிச்சேந்து பஜனை பாடுங்க.
அந்தவினை இந்தவினை எந்தவினை ஆனாயென்ன.
ஐயப்பனுக்கு மாலை போட்டா பொய்யாப் போகுங்க.

சோதனையா வேதனையா ஏதும் இல்லீங்க.
சொந்தம் பந்தம் எல்லாமே வந்து சேரூங்க.
தொலைஞ்சு போன எல்லாமே துலங்கும்
பாருங்க.
கலைஞ்சு போன சந்தோசமும் கூடி வரூங்க.
ஐயப்பனுக்கு மாலை போட்டா எல்லாம் கூடுங்க.

வீடு வாசல் காடு மனைகள் எல்லாமே

ஆடுமாடுகள் தேடுஞ் சுகங்கள் எல்லாமே
செய்யுந் தொழில்கள் சேவைகள் எல்லாமே.
தொய்யா நலமே தொடரும் எல்லாமே.
ஐயப்பனுக்கு மாலை போட்டா எல்லாமே
வாழுமே.

சொந்த வீடு சொந்தத் தொழில் சொந்தமே எல்லாமே.
சொந்தங்கள் பந்தங்கள் சுகமாக எல்லாமே.
சொந்த முனு எண்ணுவது எல்லாமே சொந்தமே.
வந்தவினை எல்லாமே வந்த வழி போகுமே.
ஐயப்பனுக்கு மாலை போட்டா ஆகாதே
இல்லையே.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.


சபரிமலை கோசம்

கார்த்திகை பிறந்திரிச்சி 

கார்த்திகை பிறந்திரிச்சி 
கவலை யெல்லாம் 
மறந்திரிச்சி.
ஆலயங்கள் விழிச்சிரிச்சி
ஆலய மணிகள் ஒலிச்சிரிச்சி
விடியல் வெளிச்சம் தெரிஞ்சிரிச்சி.
ஐயப்பா கோசங்கள்
அகிலமெங்கும் முழங்கிரிச்சி.

சந்தன வாசம் மணந்திரிச்சி
சாஸ்தா கோசம் கேட்டிரிச்சி
வந்தனம் கூறி வீதிகளெல்லாம்
வாழ்த்தொலி முழக்கம் நிறைஞ்சிரிச்சி.
விரதமிருக்கும் பக்தர்கள் கூட்டம்
சரணகோசங்கள் பாடியே
தெருக்களில் வரிசைகள் தொடர்ந்திரிச்சி.

சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா
சரணம் சரணம் சாமி ஐயப்பா 
வீதி யெங்கும் வாழ்த்துக்கள் 
கோவி லெங்கும் பாடல்கள் 
மாலை போடும் மாட்சிகள் 
காலை முதலேக் காட்சிகள் 
பக்திமயமாய் பஜனைகள்
பக்க வாத்தியங்கள் இன்னிசைகள்.

ஊரெங்கும் குரலோசை
பாரெங்கும் மணி யோசை
ஆலய மெங்கும் பூஜைகள்
ஐயப்பன் புகழ் பாடும் ஓசைகள்.
சரண கீதங்கள் சாஸ்தாவின் வேதங்கள்
சாமி ஐயப்பா சாமி ஐயப்பா
சங்கீத வசனங்கள்
சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா
தெருவீதிப் பாட்டுக்கள்.

சந்தனம் குங்குமம் வாசமே
வந்தனம் பொங்கும் கோசமே
மாலை மலர்கள் மணமே
காலைப் பொழுதின் காட்சிகள்.
சபரிமலைப் பயண மந்திரங்கள்
சாஸ்தா வழிப்பயண தந்திரங்கள் 
அதிகாலைக் குளியல்கள்
ஆரோக்கிய வழிபாடு
விதிப்பலம் நிலைப்பாடு.

கார்த்திகை பிறந்திரிச்சி 
கவலை யெல்லாம் 
மறந்திரிச்சி.
ஆலயங்கள் விழிச்சிரிச்சி
ஆலய மணிகள் ஒலிச்சிரிச்சி
விடியல் வெளிச்சம் தெரிஞ்சிரிச்சி.
ஐயப்பா கோசங்கள்
அகிலமெங்கும் முழங்கிரிச்சி.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Tuesday, 16 December 2025

ஹரிஹரபுத்திரன்

சாமி ஐயப்பா.

அரிஹர புத்திரன் கிரிதரன் ஐயப்பன் 
சபரி மலையின் சாஸ்தா ஐயப்பன் 
பந்தள ராஜன் பரிசென ஐயப்பன் 
சொந்தம் பக்தர்க்கு சுபந்தரும் ஐயப்பன் 

அவதார புருஷன் அரக்கியின் தும்சன்
தவக்கோலம் பூண்ட சபரி வாசன். யோகப் பட்டம் காலில் கட்டி 
தவயோகி யானான் சபரிமலை நேசன்.

சீதையைத் தேடிய சீதா இராமன்
சபரி ரிசியைச் சந்தித்தான் பசியில் 
நெல்லிக் கனிகளை சுவைத்துத் தேர்ந்து 
அள்ளிக் கொடுத்தாள் சபரி ரிசியாள்.

சபரி ரிசியாள் தவமிருந்த மலைதான்
சபரிமலை யாம் சாமி மலையாம். 
ஐயப்பா சாமியும் அதைத்தான் தேர்ந்து
தவம் மேற்கொண்டார் மணிகண்டனாக.

மோகினி யான ஹரிமேல் மோகம்
தாகம் கொண்டு ஹரனவர் இணைய
கைகளில் அவதரித்தார் கையப்பன்
ஹரிஹர சுதனாய் ஐயப்ப மெய்யப்பன்.

பந்தள ராஜன் அரண்மனை வளர்ந்து
பாசாங்குச் சிறுதாயரர் பொறாமை புரிந்து
சபரிமலையில் தவம் மேற்கொண்டார்
ஐயப்ப சாமியாகி அருள் பாலிக்கிறார்.

சாமி சாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் சாமி ஐயப்பா
சாமி சாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் சாமி ஐயப்பா

கவிஞர். கொ. பெ. பிச்சையா.




Monday, 15 December 2025

நடையா நடைநடந்து

நடையா நடை நடந்து 

சரணம் சரணம் ஐயப்பா
சாமிசரணம் ஐயப்பா
சாமி சாமி ஐயப்பா
சரணம் சாமி ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சாமிசரணம் ஐயப்பா
சாமி சாமி ஐயப்பா
சரணம் சாமி ஐயப்பா
நடையா நடைநடந்து
நாடெல்லாம் தான் கடந்து
கல்லும் முள்ளும் நடந்து வந்து
காடு மலை ஏறி நொந்து
மண்டல நாள் விரத மிருந்து
சொந்த சுகம் தான் மறந்து
சன்யாசம் மேற்கொண்டு
சகோதரம் பழகிக் கொண்டு
சமத்துவம் கடைப் பிடித்து
ஏற்றம் ஏழு மலை ஏறி
ஆற்றும் கரடு வழி நடந்து
போற்றும் உன் புகழ் பாடி
பேட்டைத் துள்ளி ஆட்டம் ஆடி
வந்தோமய்யா சபரிமலை
கண்டோமய்யா சாமி மலை.
பசி மறந்து பாட்டுப் பாடி
பதினெட்டுப் படிக ளேறி
இருமுடிக் கட்ட விழ்த்து
பூஜை புனஸ்காரம் செய்து
அபிசேகம் ஆராதனை
அத்தனையும் காட்சி கண்டு
அருள் வேண்டி நடை தாண்டி
பிரசாதம் முடி கட்டி
பின்சென்று படி இறங்கி
உத்தரவு உறுதி வாங்கி
பத்திரமாய் ஊர் திரும்பி
மணி மாலை கழட்டு வோம்
மணி கண்ட சாமியே
சரணம் சரணம் ஐயப்பா
சாமிசரணம் ஐயப்பா
சாமி சாமி ஐயப்பா
சரணம் சாமி ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சாமிசரணம் ஐயப்பா
சாமி சாமி ஐயப்பா
சரணம் சாமி ஐயப்பா

கவிஞர். கொ.பெ.. பிச்சையா.


சபரி யாத்திரை


சபரி யாத்திரை.

சாமி சாமி சாமி சரணம்.
சரணம் சரணம் சாமி சரணம்.
சாமி தூரமோ!பயணம் எங்கோ!
சபரி மலைக்கே சாமி பயணமோ!

விரதம் இருந்து இருமுடி கட்டி
சபரி யாத்திரை.
தவயோகி ஐயப்பன் காணும் யாத்திரை
நவயோகம் பெறுவதற்கே
சரணம் ஐயப்பன்
 
தர்மசாஸ்தா சாமி சன்னதிக்குப் 
பயணம் தொடருது.
கர்ம பாவம் களைவதற்கே 
பயணம் தொடருது.
எரிமலை ஏற்றம் முன்னே
பேட்டைத் துள்ளுது. 
வாபரை வணங்கியே
பயணம் தொடருது.

சபரிமலை சாஸ்தாவுக்கே
சரணம் சொல்லுது.
மணிகண்ட சாமிக்கே
சரணம் பாடுது.
எருமேலி ஏறிப் பின்னே!
ஏழுமலையே!
சாமி சாமி சரணம் பாடி
சன்னதி நோக்கி

பேரூர் தேட்டை ஓடை
கண்டுமேக் காலாற்றி
யாத்திரையே பெரும்பாதை
பயணம் தொடருது.

அடுத்து வரும் அழுதாநதி நீராடி
அழுதாமலை ஏற்றம் ஏறுது.
அழுதாமலை கல்லெடுத்து
பயணம் தொடருது.
சாமி ஐயப்பன் நடந்து சென்ற
சபரிமலைப் பாதைஇதுவே.
சபரி பீடம் தரிசனமும் கண்டு நடந்தது.

இஞ்சிப் பாறை ஏற்றம் ஏறி
கரிமலை ஏற்றம்.
கொஞ்சம் இளைப்பாறிப்பின்
பம்பாநதி நீ ராடி நீலி மலை ஏற்றம்
சன்னதியை நெருங்க நெருங்க
சரண கோசங்கள்.
சாமி சாமி என்றே சாஸ்தா முழக்கங்கள்
சரணம் சரணம் என்றே 
ஐயப்பாப் பாடல்கள்.

ஹரிஹர புத்திரன்  அவதாரமே
அரக்கி மஹிசாவை வதம் செய்யவே.
அழுதாமலை கல்கொண்ட சாமிகளுமே
அரக்கி மஹிசா குன்றம் நோக்கி
வீசி எறிந்தனர்___அரக்கியை
வதம் செய்த அடையாளம் 
விதம் செய்தனர்.

சன்னதியில் சரணம் ஆனார்
சாமி ஐயப்பா.

நெய் மணக்கும் சபரிமலை
சாமி ஐயப்பா
பொய் மறந்தார் சபரிமலை
சாமி ஐயப்பா.
பிரம்மச்சரியம் பற்றி வந்தார்
சாமி ஐயப்பா
அறம் போற்றி விரதம் கொண்டார்
சாமி ஐயப்பா.
பதினெட்டுப் படியேறி சாமி ஐயப்பா 
பார்வை கொண்ட பயன் கண்டார்
சாமி ஐயப்பா.
யோகப் பட்டம் கட்டிக் கொண்டு
சாமி ஐயப்பா
தவக்கோலம் தான் கொண்டார்
சாமி ஐயப்பா.
இருமுடி தான் பிரித்து சாமி ஐயப்பா 
பெறும் பூஜை ஏற்றுக்கொண்டார்
சாமி ஐயப்பா.
சந்தனம் தான் குளித்து சாமி ஐயப்பா 
வந்தனம் ஏற்றுக் கொண்டார் சாமி 
ஐயப்பா 
அருள் வழங்கி ஆசி தந்தார் சாமி ஐயப்பா.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Saturday, 13 December 2025

கிராம தேவதைகள்

கிராம தேவதைகள்

அம்மா அம்மா என்றே அழைக்கிறோம்
சும்மா இல்லை சுகமாக வாழ்கிறோம்.
சந்தனம் மணக்கும்  சந்தன மாரிகள்
வந்தனம் உமக்கே வாழ்த்து கிறோம் வாழி!

உச்சிமகா காளி வடக்குவாச் செல்வி
உச்சம் தந்த தெய்வங்களே வாழி!
அஷ்டக் காளிகள் அவதாரத் தாய்களே
இஷ்டமான எங்கள் தெய்வங்களே வாழி!

எல்லைக் காவல் கருப்பச் சாமிகள்
தொல்லை களில்லை நோய்க ளில்லை
வல்ல தெய்வங்கள் வாழும் வல்லூராம்
கொல்லம் பரும்பூரம் நல்லூராம் வாழி!

எத்தனைத் தாய்கள் எமைப் பெற்றாலும்
அத்தனைத் தாய்களும் நீவீர் அம்மா.
ஒத்தணைத்த ஒருதாய் பிள்ளை களாம்
சித்தம் ஒன்றி வாழ வைத்தீர்கள் வாழி!

நீர்வளம் நிலவளம் சீர்பெற்ற நல்லூராம்
போர்த் தளமாம் வீரமண் கொல்லம் பரும்பாம்.
பஞ்சம்பசி கொஞ்சமும் இல்லா ஊராம்
மிஞ்சியதும் கொடுத் துதவும் நல்லூராம் வாழி.!

படித்தவர்கள் படிப்பாளிகள் மேதாவிகள்
தடித்தசொல் வீசாதார் தாழவும். பேசாதார்
முடிக்கும்  செயலே முனைவ ரென்றும்
விடியல் கண்ட வாழ்வே வாழி!வாழி!

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

ஐயனார்

வெள்ளிச் சரிகை வேட்டி கட்டி
வெள்ளக் குதிரை ஏறி வாரார்.
வீச்சருவாள் கையில் ஏற்றி
கொல்லம் பரும்புக் காவல் சாமி
நல்ல அய்ய னாரு சாமி
துள்ளித் துள்ளி வாராரு

கருத்த மீசை முறுக்கி விட்டு
கம்பி மாதிரி வளைச்சி விட்டு
மின்னல் சரிகை தலைப்பாக் கட்டி
மிரட்டுஞ் சாட்டை சுழட்டிக் கிட்டு
விரைநது வாரார் அய்யனார்.

ஊருக்கு மேற்கே உசந்த கோபுரம்
உள்ளது கோட்டை அய்யனார் கோவில்
நேரே கிழக்கு கொல்லம் பரும்பு
ஊரே அய்யனார் காவல் வரம்பு.

வேட்டைக்கு என்ன அவசரமோ
சாட்டைக்கு என்ன அவசியமோ
தேடி வந்தோம் கோவிலுக்கு
தேவைக்குத் தானே ஓடி வந்தோம்.

நோய் நொடி இல்லா ஊராக
நீ செய் அய்யா அய்யனார்.
வாடிய விவசாயம் வளம்பெறவே
வகை செய் அய்யா அய்யனாரே.



Thursday, 11 December 2025

வேண்டும் வேண்டும்.


வேண்டும்!வேண்டும்!

பூமியில் பிறவி வேண்டும்.
பிறவியில் மனிதம் வேண்டும்..
மனிதனில் மனம் வேண்டும்.
மனத்தினில் அன்பு வேண்டும்.

அன்புக்குக் கருணை வேண்டும்.
கருணைக்கு இரங்க வேண்டும்
இரங்கிட  அருள் வேண்டும்.
அருளிடத் தூய்மை வேண்டும்.

தூய்மைக்குப் பக்தி வேண்டும்.
பக்திக்கு இறைஞ்ச வேண்டும்.
இறைஞ்சிட மெய்மை வேண்டும்.
மெயமையே துலங்க வேண்டும்.

துலங்கிடத் தியானம் வேண்டும்.
தியானிக்கச் சிந்தை வேண்டும்.
சிந்தைக்குள் அமைதி வேண்டும்.
அமைதிக்குத் தீர்க்கம் வேண்டும்.

தீர்க்கம்பெற ஞானம் வேண்டும்.
ஞானம்பெற யோகம் வேண்டும்.
யோகம்பெற பயிற்சி வேண்டும்.
பயிற்சிக்குப் பழக வேண்டும்.

பழகிடத் துணிய வேண்டும்..
துணிந்திட உறுதி வேண்டும்.
உறுதிக்கு உரம் வேண்டும்.
உரம் பெற நம்பிட வேண்டும்.

நம்பிட ஒரு மாரக்கம் வேண்டும்.
மார்க்கம் அதைத் தேடிட வேண்டும்.
மார்க்கஞ் சேர்ந்திட மூலம் வேண்டும்.
மூலம் அதைப் பற்றிட வேண்டும்.

உறுதியில் உறுதி வேண்டும்
உறுதியிற் தேடல் வேண்டும்.
தேடித் தேடிக் கிடைத்திட வேண்டும்.
தெய்வத் தரிசனம் யோகம் வேண்டும்.

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.




இயற்கையே போற்றி!

இயற்கை நீயே இறையே போற்றி!

ஒளி ஒலி! நீர் நெருப்பு 
வளி வெளி வான்!மீன் 
இரவு பகல்! வகை வடிவு!
இயற்கை நீயே இறையே போற்றி!

மழை வெயில் மலை மண் 
விதை முளை மூலம் தூலம் 
நிசம் நிழல் நிலம் கடல் 
இயற்கை நீயே இறையே போற்றி!

மலர் மணம் குலம் குணம் 
கரு உரு பேதம் பிரிவு
வேற்றுமை ஒற்றுமை அறிவு ஆற்றல்
இயற்கை நீயே இறையே போற்றி!

மொழி வழி இசை எழுத்து 
ஈவு ஈகை கலை களிப்பு 
உயிர் உடல் ஊன் ஊக்கம்
இயற்கை நீயே இறையே போற்றி!

ஆண் பெண் அசல் நகல் 
பூவு பிஞ்சு காய் கனி 
செடி கொடி மரம் புரம்
இயற்கை நீயே! இறையே  போற்றி!

ஆக்கல் அழித்தல் பிறப்பு இறப்பு
அழகு அவலம் பஞ்சம் பசி
நிறை குறை வளம் வறுமை
இயற்கை நீயே இறையே போற்றி!

நடப்பன பறப்பன ஊர்வன நீய்வன
நகர்வன நிலையன மொழிவன ஓலிவன
சத்தம் சங்கீதம் காவியம் கற்பனை
இயற்கை நீயே இறையே போற்றி!

இயற்கை நீயே இறையே போற்றி!
இயல் இசை நாடகத் தமிழே போற்றி!
செயல் முறை யாவும் சீரே போற்றி"
தயவென யாவும் இயற்கையே போற்றி!

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.






பக்தியின் பலஹீனம்

பக்தியின் பலவீனம்!

முக்தி பாடி விளக்குவார்
பக்தி மூடி ஒளிந்திருப்பார்.
சக்தி வேடம்புனைந்திருப்பார்

மாலைகள் சூடுவார்
மந்திரங் கூறுவார்.
சேலைகள் கண்டாரானால்
சிங்காரம் பாடுவார்.

பாவிகள் கூடுவார்
தேவிகள் ஆடுவார்.
ஆவிகள் விரட்டுவதாய்
கோபியரைக் கொஞ்சுவார்.

சாந்தி கிடைக்குமென்பார்.
சர்வமும் நானென்பார்.
வாந்தி எடுக்கவைத்து
வரிசையாய் சமாதிவைப்பார்.

காவடி தூக்குவார்
காவியும் உடுத்துவார்.
சேவடிகள் சேவிக்க
சேத்திரங்கள் செல்லுவார்.

ஆவதும் அதனாலே
ஆயிரம் உண்டென்றால்
போவதும் சில லட்சம்
போக்கியும் வாரிடுவார்.

கருநாவிற் கடவுளின்
திருநாமம் செப்புவார்.
உருவாக்கிக் கூட்டத்தை
ஊரறிய திரட்டுவார்.

தெருக்களில் பாடச்செய்வார்
திருப்பணி மயக்கிவைப்பார்.
விளம்பரம் ஆக்கிக்கொள்வார்
வருமானம் பெருக்கிச்சேர்ப்பார்.

கோடிகளாய் செல்வங்கள்
குவியுது போலிகளிடம்
பக்தியெனும் பலவீனம்
பயன்படுத்தும் தந்திரம்...

படித்த முட்டாள்களும்
பாசாங்கை நம்பும் வரை
கருத்த பாவங்களும்
வேசமிட்டு ஆடாதோ!

இடிந்த கோவில்களாய்
இதயங்கள் இருண்டதால்
உணர்ந்த பக்தி மெய்யும்
உள்நுழையக் கூசாதோ!

மனிதரின் நம்பிக்கையை
மயக்கமென எண்ணியே
புனிதராகும் வேடத்தையும்
பொறுக்குமோ மெய்ப்பொருளும்!

எதுவரை போகுமோ
அதுவரை போகட்டும்!
வேடங்கள் கலைவதற்கும்
வெகுதூரம் இல்லையே!!.


சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா,




Monday, 8 December 2025

ஆனைமுகனே

ஆனை முகனே அருள் செய் ஐங்கரனே

ஆனைமுகனே அருள் செய் ஐங்கரனே!
தானைத் தலைவனே தர்மத்தின் காவலனே!
வினை தீர்க்கும் கண நாதா! 
எனை மீட்பாய் குணநாதா!

அறிவின் திருவே அமைதியின் உருவே.
உறவின் தருவே உதவும் பெருவே.
தொழிலின் குருவே தொடரும் வரவே.
பொழிவாய் அருளே புகழின் பொருளே.

ஆணை முகனே அன்பின் அழகே.
பானை வயிறோன் பண்பின் பழமே.
ஏழையின் இனனே எலியின் வாகனனே.
ஊழை விரட்டும் வினைமுன் காவலனே.

உலகே சொந்தம் உனக்குள்ள பந்தம்.
பழகிட என்றும் சனியுன்னை அஞ்சும்.
விலகும் தோஷங்கள் விநாயகா என்றால்.
துலங்கும் நேசங்கள் கணபதி கண்டால்.

வாஸ்தும் பொய்யாகும் வாசல் நீயிருந்தால்
ஆஸ்தி கைய்யாகும் ஆனைமுகன் நீதெரிந்தால்.
சந்திப்பு இடமெங்கும் சந்திப்பாய் நீ உறைந்தால்.

முந்தி முன்னிற்கும் நல்வினைநீ ஆனணையிட்டால்.

ஞானத் திருமுகமே மோனப்பெரும் பொருளே
தானம் தருமருளே தீனமழி ஐங்கரனே.
பேணும் பெருமானே வேணுமுன் கருணையே
நானும் அருகாவேன் பூணுமணி பொற்சரமே!.

கொ.பெ.பி.அய்யா.

Saturday, 6 December 2025

இருமுடி

இருமுடி

சாமி சாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் சாமி ஐயப்பா
இருமுடி கட்டி விரதம் இருந்து 
சரணம் சொல்லி சாமி எண்ணி
பெருவழிப் பாதை திருமொழி பாடி
வருகிறோம் தேடி ஒருமுனை கூடி.

பலமுடி  கட்டி இருமுடி ஏற்றி
நலமுடன் பலப்பல ஆண்டுகள் ஓடி
சேமம் குருசாமி செல்லத் துரைசாமி
சிரமங்கள் விலக்கி சேர்ந்துணை பழகி 
களைப்புகள் நீங்க கலகலப்பாகி
மலைக்காமல் ஏற்றம் வழி நடத்திவாரார்

படவீட்டம்மன் அருளினைப் பெற்று 
திடமுடன் சாமிகள் கடமைகள் கற்று 
உணவுக்கு ஓருமுடி சாமிக்கு மறுமுடி
இருமுடி கட்டி வழி நடத்த வருவீர்.
பொய்யறு பாங்காய் நெய்நிறை தேங்காய் 
நொய்யறு அரிசி பூஜைப் பொருட்கள் 
முன்முடி பின்முடி இருமுடி கட்டி 
உன்வழி  தொடர்கிறோம் சாமி ஐயப்பா.

சாமி சாமி சாமான்யரும் சாமி 
சமத்துவம் பழகும் சமரசம் சாமி
உயர்வு தாழ்வு வேற்றுமை இல்லை 
பயிலும் சமத்துவம் பேதங்கள் இல்லை 
ஒருகுலம் ஓருநிறை ஒற்றுமைப் பயிற்சி 
திருமுறை பழக்கும் தெய்வீக முயற்சி.
சாமி என்றால் சகோதரம் சாமி
காமிக்க ஒன்றாம் சபரிமலை சாமி 

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Friday, 5 December 2025

வேடநத்தம்.


விரும்பும் ஊர் வேடநத்தம்.

வேட நத்தம் ஊர் என்றாலே-- மனம்
விரும்பும் ஊர் எனும் பொருளாம்
நாடு போற்றும் நல்ல ஊராம்--உளம்
நாடும் வசதிகள் கூடும் ஊராம்.

தூத்துக் குடியாம் மாவட்டம் --வளம்
ஏற்றுக் குடியாம் வேடநத்தம்.
வேற்று மைகள் பாராட்டா--உலகம்
போற்றுக் குடியாம் வேடநத்தம்.!

ஊரென ஒன்றாய் சேருவார்-- அன்பில்
உயர்ந்தது தோப்பால் கூறுவார்.
சீரென ஊரைப் போற்றுவார்-- வான்
நேரெனக் கோபுரம் தோற்றுவார்.

வேடுவர் மாதை விரும்பியே-- வேலன்
தேடிக் களைத்துத் திரும்பியே.
வேடர் நத்தம் கண்டானே--நந்நீர்
ஓடப் பெருக்கினாள் விசாலாட்சி !

வீர வேடர் நீராவி கண்டு--அவர்
வேட்கை தணிய பருகிட மொண்டு
ஆறிய தாகம் அருமை கொண்டு--தாகம்
தீர்ந்த நத்தம் வேட நத்தம்.

ஊரெனக் குடும்பம் ஒன்றில்-- பந்தம்
தேரெனக் கூடிச் சொந்தம்,
சீரென நகர்த்தும் செம்மை-- மொத்தப்
பேரெனப் புகழ்வார் வேடநத்தம்! 

விரிந்தும் பெருகி வளர்ந்தும்- நாளும்!
புரிந்த சமத்துவம் அமைந்து
நிறைந்தும் இணக்கம் நிலைக்கும்-பரவி
விரைந்து பெருகும் வேடைநகர்.

சுவர்க்கம் என்றால் எங்கே--அது
இருக்கும் வேடைநகர் அங்கே.
கரிய மாலின் கருணையில் --புவி
புதிய சுவர்க்கம் வேடை.நகர்.

காசி விசாலா காமாட்சி ----ஊர்
வாசி விஸ்வ நாதன் ஆசி
நேசி மனமே மாசினி வீழும்--மேவும்
ஆட்சியின் வேடை நகர் வாழி!

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.
க்ஷ

கும்மிப் பாட்டு

கும்மிப் பாட்டு 

கும்மியடி பெண்ணே கும்மியடி
குனிந்து நிமிர்ந்து கும்மியடி
நாடார் குலதேவி பத்திரகாளி 
நல்லருள் வேண்டி கும்மியடி.

கொல்லம் பரும்பூர் குடிகொண்ட
நல்லருள் தேவி பத்திரகாளியே!
வல்லமை கொடுத்து வாழ்வளித்த
நல்லவை வணங்கியே கும்மியடி.

சிவனார் நெற்றிக் கண்ணிலே!
சிவப் பொரிகளால் அவதரித்து,
அவலம் போக்கிய அம்மா நீ!
உவந்து வாம்மா பத்திரகாளியே வா!

நாடார் குலத் தாயே நீ!
நாடாப் பிணிகள் ஓட்டியே!
வாடா மல்லிப் பூப்போலவே,
கோடாக் காப்பு பத்திரகாளியே வா!

விரதம் கொண்டு காத்து வந்தோம்
வளர்த்து முளைப்பாரி சுமந்தோம்
அருளை வேண்டி குலவை இட்டோம்
அருள்செய் அம்மா பத்திர காளியே வா!

அல்லவை நீக்க வரம் பெற்றாயே
அக்கிரமம் அழிக்க அவதரித்தாயே
ஆனி மாதங்கள் கொண்டாடி னோம்
அவனி அருளம்மா பத்திரகாளியே வா!

ஆண்டு வந்த பரம்பரை  அம்மா.
ஆண்டு வாரோம் அகில மெல்லாம்.
நாடா ரின்றி நாட்டாமை இல்லை.
நாடே கொண்டோம் பத்திர காளியே வா!

தரத்தில் உயர்ந்தோம் உன்னாலே!
வரத்தில் வாழ்ந்தோம் தன்னாலே.
நாடார் என்போம் பெருமை யாய்.
கேடில்லை எம்மாலே காளியே நீ வா!

மதித்தே கற்றோம் மரியாதையே!
உதித்தே வந்தோம் உன்னாலே!
உழைப்பால் தான் சயமரியாதை.
தலை நிமிர்ந்தோம் பத்திர காளியே வா!

உலகம் எங்கும் பரவி வாழ்ந்தோம்.
பழகும் தன்மை உண்மை நின்றோம்.
வரம் தந்த தாயே உன்னாலே தான்.
வாழ்கிறோம் மேன்மை பத்திர காளியே வா!

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Thursday, 4 December 2025

மாலையம்மன் வரலாறு

மாலையம்மன் வரலாறு.

சிந்து நதிக் கரையின் முந்தியநாகரிகம்
கொண்டு அமைந்தது இந்து ஆகமம்
சத்திய குலத்தின் ஆதார உதயம்:
பிச்சையா இகடோன் மாலையம்மாள் சரிதம்.

நாடோடி போன்று ஓடோடி அனுப்பர்
தேடிய பட்டி கவுண்டன் பட்டி.
உகந்த பக்தி ஒன்னம்மா வம்சம்,
தவந்தன் சக்தி கம்பளர் அம்சம்;

ஆடுகள் மேய்ப்பது அனுப்பர் பிழைப்பு,
வீடுகள் காப்பது மகளீர் பொறுப்பு.
வேளான் என்பார் விவசாயி ஆவார்,
தாளாண்மை ஆர்வர் தன்னிக ராவர்.

கவுண்டன் பட்டி கல்லூரணி ஊரார்,
உகந்த கெட்டி ஓர் ஊரார் போலர்.
இரு ஊர் நாட்டாமை வைரவக் கவுண்டர்
ஒரே தங்கை மச்சானுடன் வாழ்ந்தார்.

தங்கை இரட்டை பெண்கள் ஈன்று
சென்றாள் அண்ணன் கைகளில் ஈந்து.
வீச்சிட இரட்டைக் குழந்தைகள் ஏந்தி:
உச்சி முகர்ந்தார் தாய்மாமன் தாங்கி.

தங்கை பெற்ற தவப்புதல் வியர்கள்,
சின்னு பைய்யி வீரபையி இருவர்;
சக்தி பெற்ற ஒன்னம்மா பக்தியர்:
சித்தம் சுத்தம் மாமன் பற்றியர்.

மருமகள் உறவு பிணையாக ஆனார்,
பிறவி பறந்து கடனாக்கிப் போனாள்.
தாய்க்குறை தீர்க்க தன்மடி சுமந்தார்.
தாயான வைரவர் தாயாகி வளர்த்தார்.

சின்னு பைய்யும் வீர பைய்யும்,
கண்கள் ஐய்யம் காணிடச் செய்யும்.
இருவர் ஒருவர் என்பதன் அதிசயம்,
மறுகும் கண்கள் மயக்கும் இரகசியம்.

சேமம் மேலக் கல்லூரணிக் காடு.
மாமன் ஆடுகள் மேய்ய்த்திடும் பாடு.
வேளைகள் மதியம் மாமனைத் தேடி.
சோறு சுமப்பர் சோதரி கூடி.

வாலைக் கன்னியர் சோறு ஆக்கி,
மேலக் கல்லூரணிக் காடு நோக்கி,
மாமன் பாசம் ஆசையில் தேக்கி:
ஏகினர் விசாகம் நோன்பும் தாங்கி.

களையஞ் சுமந்திரு கன்னியர் செல்ல, 
வளைந்த கதிர்கள் என்னமோ சொல்ல!
குருவிகள் பறந்து வழித்துணை பாடி
இரட்டை எழிலில் எவளெனத் தேடும்..

எரியும் சூரியனும் இரக்கம் பார்ப்பான்.
கருப்பு நேராமல் கருமேகம் ஒளிவான்.
மருளும் மதியம் இரவென மயங்கும்:
விரையும் மதியும் வழியது தொடரும்.

தென்றல் கொண்டல் பூவாரித் தூவும்;
கண்டால் ஊர்வசி மேனகை சோரும்.
மாமனைக் காணும் மாலது கூடி
கண்ணெட்டும் தூரம் தேடினர் ஓடி

சிரித்து விளையாடி நடத்திய பாதை,
மறித்துக் குலையாட வருத்திய வேளை
விரித்த படங்காட்டி விடமுடன் நாகம்:
முறுக்கிச் சுருளாக சுற்றியது தேகம்.

மாலனை அழைத்த பாஞ்சாலி போன்று,
மாமனைக் கூவினர் அவலையர் இன்று.
செவிகள் உணர்த்தும் அபாயம் எதுவோ!
தவிக்குந் தாயின் அவசரம் இதுவோ!

பதறித் துடித்து அலறி ஓடி,
கதறும் செவிவழி காடுகள் தேடி;
கண்டான் அவலம் கண்மாய் கரையில்:
நின்றான் வடித்த கண்ணீர் திரையில்.

தலைக்கும் மேலே படமெடுத் தாட,
அறுத்தான் அரவம் தலையது ஓட;
சிதைத்தான் பாம்பை துண்டங் களாக:
விடுத்தான் இருவரை தனித்தனி ஆக.

சர்பத்தின் தலையோ தரையைச் சீண்டி
சீறிப் பறந்தது மாமனைக் தீண்டி
சோகம் நிறைந்தது சுந்தர வதனம்:
தேகம் குளிர்ந்து சொன்னது பயணம்.

ஆவி பிரிகிற வேளை நெருக்கம்,
கேவி உரைக்க நாவது சுருக்கும்.
பாவி நானோ பறந்திடு வேனோ!
கோவிப் பாளேஉம் தாயெனப் பறந்தார்.

மருமக்கள் இருவர் மாமன் மார்பில்
பொருந்தக் கதறி புரண்டனர் சோர்வில்.
இறைவன் கட்டளை இதுவே ஆனால்:
எமக்கினி உற்றதும் அதுவே என்றார்.

தாயன்பின் பிறகு தாய்மாமன் துணை,
தாய்மாமன் பிறகு யாரிங்கு இணை?
அனாதை அவலம் எவர்க்கும் பாவம்:
இனமான கற்பின் இவரானார் தீபம்.

வாழ்வினி வாழ ஊரென்ன சொல்லும்!
வாழ்வே போயின் யாரென்ன செய்யும்!
காணுந் திசைகள் கண்ணீர் சொறிந்து
வானம் துடிக்க கானகம் அழுதது

மாமனை ஏந்தினள் சின்னு பைய்யி,
மடிமீது புரண்டனள் வீர பைய்யி.
தீயுண்ட வன்னிமரம் தாயெனப் பற்ற
மேயும் ஆடுகள் தாவின உடன்தீ.

அரவம் தீண்டிய சாபம் என்ன?
அறிவும் தாண்டிய பாவம் என்ன?
பெற்றுப் போனாள் அனாதை யானோம்
உற்றார் போனால் நாமென் னாவோம"

மருமக்கள் ஒப்பாரி வானம் பிளக்க,
மறுமுனை செவ்வேறி தானும் முழக்க;
ஆகாயம் தீவாரி காடுகள் எரிந்தன:
மேகாயம் பூவார வானேகிப் பறந்தனர்.

வானவர் சூழ வாழ்த்தொலி பாட,
மாணவர் ஏற்று மாலைகள் சூட
மாலை யம்மன் எனும்பேர் ஆட
மேலக் கல்லூரணி அமர்ந்தனர் வீடு.

இகடோர் வழியின் மூத்த மகளே!
இகமும் பரமும் உன்னிறைப் புகழே!
அனுப்பரின் காவல் புலமுன் கோவில்!
துணையுன் ஏவல் தெய்வம்நீ நேரில்.

ஒன்னம்மா ஆக்கிய அக்கினிக் குஞ்சு,
பின்னும் மேலக் கல்லூரணி எஞ்சி;
வீரிய நெருப்பு மேவிய தீர்ப்பு:
வீர பைகளின் கற்பதன் ஏற்பு.

சோம வாரம் ஆராதனை நேரம்,
ஏமம் விசாகம் குருபூசை நாளாம்;
வசத்தின் நம்பிக்கை அசத்தும் ஆசை:
நிசத்தின் தெய்வம் நித்திய பூசை:

நேரில் ஆளோடு பேசுந் தெய்வம்.
நேருந் துன்பங்கள் தீர்க்குந் தெய்வம்.
கம்மங் காடுகள் காக்குந் தெய்வம்.
கைவளை வாங்கி கோர்குந் தெய்வம்.

கொ.பெ.பி.அய்யா.
.

Wednesday, 3 December 2025

கந்தா கந்தா கந்தய்யா

காவடிப் பாட்டு.

கந்தா கந்தா கந்தய்யா!
காவடி ஆடும் கந்தய்யா!
வந்தோம் வந்தோம் கந்தய்யா--உன்
சன்னதி தேடி கந்தய்யா"
வேலா வேலா வேலய்யா!
வினைதீர் வடிவேல் வேலய்யா!.
வேண்டி வேண்டி வேலய்யா,-உனை
வேண்டி வந்தோம் வேலய்யா!

கடம்பா கடம்பா கார்த்திகேயா!
காத்தருள் வாயே கார்த்திகேயா!
நடந்தோம் நடந்தோம் கார்த்திகேயா--நீ
நல்லருள் தருகக் கார்த்திகேயா!
முருகா முருகா முருகய்யா!.
வருவாய் வருவாய் முருகய்யா!.
வரவாய் நீயருள் முருகய்யா-வரம்
தருவாய் திருவாய் முருகய்யா!

பாலா பாலா சிவபாலா"
பழம்நீ பழனி சிவபாலா!
மயில்மேல் வருவாய் சிவபாலா--வள்ளி
மனம்மகிழ் அழகா சிவபாலா!
பாணி பாணி தண்டபாணி!
பழனி நின்ற தண்டபாணி!
ஔவைத் தமிழ் நீ தண்டபாணி--தமிழ்
செவ்வை மொழிநீ தண்டபாணி!

குன்றம் குன்றம் குமராநீ!
கொண்டும் கொண்டும் குமராநீ!
நின்றும் நின்றும் குமராநீ--வரம்
தந்தும் வளம்செய் குமராநீ.!
வள்ளி தெய்வானை கணவாளா!
நல்லதே அருளும் திருவாளா!
நாளும் நல்லருள் கொடையாளா--மணக்
கோலம் கொண்ட மணவாளா!

அம்மை அப்பன் சண்முகனே
அறுகுணத் தும்சம் அறுமுகனே
சரவணப் பொய்கை சரவணனே--அருள்
தருவதன் அம்சம் திருமுகனே
தீய சக்தித் தீர்ப்பவனே
நேய பக்தி ஈர்ப்பவனே
கந்த சஷ்டிக் கவசனே--காக்கச்
செந்தூர் வெற்றித் திருமகனே

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Tuesday, 2 December 2025

வினாயகா!


நானும் அருகாவேன்.

வினைகள் தீர்த்து துணைசெய் நாயகா.
எனைநீ பார்த்து துணைவா (வி)நாயகா.
உனைநான் கேட்டேன் எனைநீ மீட்டு
அணைஉன் கூட்டாய் கணநீ நாதா.

அறிவின் திருவே அமைதியின் உருவே.
உறவின் தருவே உதவும் பெருவே.
தொழிலின் குருவே தொடரும் வரவே.
பொழிவாய் அருளே புகழின் பொருளே.

ஆணை முகனே அன்பின் அழகே.
பாணை வயிறே பண்பின் பழமே.
ஏழை இனமே எலியுன் தனமே.
ஊழை விரட்டு மறுநாள் தினமே.

உலகே சொந்தம் உனக்கென்ன பந்தம்.
பழக என்றும் சனியுன்னை அஞ்சும்.
விலகும் தோஷங்கள் விநாயகா என்றால்.
துலங்கும் நேசங்கள் கணபதி கண்டால்.

வாஸ்தும் பொய்யாகும் வாசல் நீயிருந்தால்
ஆஸ்தி செய்யாகும் ஆனை நீதெரிந்தால்.
சந்தி இடமெங்கும் சந்திக்க நீஉறைந்தால்.
முந்தி சுபமங்கு முன்னிற்கும் நீபுரிந்தால்.

ஞானத் திருமுகமே மோனப்பெரும் பொருளே
தானம் தருமருளே கோணமழி ஐங்கரனே.
பேணும் பெருமானே வேணுமுன் நல்வரமே
நானும் அருகானால் பூணுமணி தாராவேன்.


கொ.பெ.பிச்சையா.


பத்திரகாளி துதி

பத்திரகாளி துதி.

கொல்லம் பரும்பு  நாடார் குல
குலதெய்வம் பத்திர காளியே போற்றி.
அக்கிரமங்கள் அழிக்க வந்த 
உக்கிர தேவி பத்திரகாளியே போற்றி.

கன்னிகை தேவிக்கும் சத்திரிய குருவுக்கும் பிறந்த நாடார் வம்ச
குழந்தைகள் எழுவர்கு தாயாகித் 
தத்தெடுத்து வளர்த்த தாயே 
பத்திரகாளியே போற்றி! போற்றி!

தட்சனை அழிக்கத் தன் படைப்பாக
தனிவரம் பெற்ற காளியே போற்றி 
வீர அம்சம் சத்திரிய வம்சம் 
நாடார் குலதெய்வமே போற்றி! போற்றி!

உலகெலாம் வணிகம் செய்ய 
உடன் செல்லும் காவல் தெய்வமே போற்றி.
வீர வம்சம் வெற்றி அம்சம் நாடார்கு
துலாக் கோல் தானளித்த பத்திர காளியே போற்றி! போற்றி!

செல்லும் இடமெல்லாம் சிறப்புற வாழவே
அல்லும் பகலும் அவருடன் காவலே
அரணேயான பத்திர காளியே போற்றி 
உரமே வரமே தாயே காளியே போற்றி!
 போற்றி!

ஈசன் மகளே எழுதீ நலமே
வாசன் மருமகள் வளர்பிறை குலமே
தட்சனை வதைக்கத் தனி வரம் பெற்ற
இலட்சியத் தாயே பத்திர காளியே போற்றி! போற்றி!

பார்வதித் தாயை பஸ்பமாக்கிய
பாவி தட்சனை அழித்த காளியே
அசுர குலத்தை அடியோடு அழித்த
ஆக்ரோசத் தேவியே பத்திர காளியே
போற்றி"! போற்றி!

முக்கண் தேவியே முன்னாவுக் காளியே
பதினெட்டுக் கரங்கள் பதினெண் ஆயுதங்கள்.
திக்கெட்டும் அதிரும் திமிற்செரு பார்வையும்
விதி முடிக்கும் காளியே போற்றி போற்றி!!
 
தீயவை தீர்க்கவே தீயாய் வந்தவள்
அல்லவை அழிக்கவே அவதாரம் எடுத்தவள்
சிவனார் புத்திரி சிவபாலர் சோதரி
மாயவன் மருமகள் பத்திரகாளியே போற்றி! போற்றி!

திரிசூலிக் கோவியே! புலிவாகனச் சூரியே!
அரிகரன் சொந்தக்காரி அபயக்குரல்
அவசரக்காரி!
தராசுக்கோல் தன்யக் காரி தனயன் நாடார் பந்தக்காரி.
புண்ணிவதி பத்திர காளியே போற்றி! போற்றி!

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Monday, 1 December 2025

சபரி மலை சரணம்.



சபரிமலை வாழும் நீ
சாமி ஐயப்பா-உன்
சரணக்கலை நாடிவாரேன
சாமி ஐயப்பா!
பள்ளிக்கட்டுக் கட்டிக்கிட்டு
சாமி ஐயப்பா--பேட்டைத்
துள்ளி ஆடி வாரேன்
சாமி ஐயப்பா!
சாமி ஐயப்பா!
சரணம் ஐயப்பா!

பதினெட்டு மலைதாண்டி
சாமி ஐயப்பா!
பதினெட்டுப் படியேறி
சாமி ஐயப்பா!
கதியென்று உனைவேண்டி
சாமி ஐயப்பா
அருளென்று தேடினேன்
சாமி ஐயப்பா!
விரதம் ஏற்று நடந்து வாரேன்
சாமி ஐயப்பா---உன்னால்
சாதி மதம் மறந்துவிட்டேன்
சாமி ஐயப்பா!
சாமி ஐயப்பா"
சரணம் ஐயப்பா!

சரணம் சரணம் கூறிக்கொண்டு
சாமி ஐயப்பா!
உச்சிமலை ஏறிவந்தேன்
சாமி ஐயப்பா!
எண்ண மெல்லாம் வாழும் நீ
சாமி ஐயப்பா!
எனக்குள்ளே கண்டு கொண்டேன்
சாமி ஐயப்பா!--உன்னால்
சமத்துவம் பழகிக்கொண்டேன்
சாமி ஐயப்பா!
சாமி ஐயப்பா!
சரணம் ஐயப்பா!

சாமிசாமியே! சரணம்சரணமே!
சாமியெல்லாமே!சகலமெல்லாமே!
ஐய்யன்ஐய்யனே!மெய்யன்மெய்யனே!
அகிலமெல்லாமே!அன்பிலெல்லாமே!

துளசிமாலை சத்தியமா போடுவேன்.
பழகிப் போச்சு நிதமுன்னைப் பாடுவேன்
சாமி சாமி சாமினு சொல்லிச் சொல்லி
சாமி ஆயிட்டேன்
சரணம் சரணம் சரணஞ் சொல்லி
சரணடைஞ் சிட்டேன்.
சாமி ஐயப்பா!சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா!சாமி ஐயப்பா!

கொ.பெ.பி.அய்யா.



Sunday, 30 November 2025

கொல்லம்பரும்பு

கொல்லம் பரும்பு

வெல்லங் கரும்பு வாசனை
கொல்லம் பரும்பு ஊரினை
சொல்ல விரும்பும் பாட்டினை
மெல்லிசை அரும்பப் பாடுகிறேன்.
சொல்லிசைப் பிச்சையா சூடுகிறேன்.

நெல்மணம் வாசம் நெடுவயல் தோட்டம்
நல்மனம் பேசும் நடுவனர் கூட்டம்.
நீர்வளம் மேவும் ஏரிகுளங்கள் சூழும்
நேர் குணம் யாவும் சீர்வளம் ஆளும் 
ஓர்ஊர் கூறும் உலகம் கொல்லம் பரும்பு

ஊராளும் தேவியர் சந்தண மாரிகள்
ஊர்காவல்  ஐயன் கருப்பு சாமி கள்
மேலும் உச்சி பத்திர காளிச் செல்வி 
வாழும் ஆளும் நல்லருள் வாரி நல்கி
காக்கும் தெய்வங்கள் வாழி!வாழி!

சுற்றம் ஒன்றாய் பற்றும் நன்றாய்
உற்றம் உறவு உரியோர் வரவாய்
கற்றுக் கனிந்தோர் கடமை பணிந்தோர்.
நல்லோர் கூடி வல்லோர் மேவி
உள்ளோர் எல்லாம் உதவுவார் தேடி.

ஊரென்ற உணர்வு ஊரொன்ற வாழ்வு
யாரேன்று வினவா சீரொன்ற வாழ்வு
ஊரென்ற பேரை மார்தட்டிச் சோல்வார்.
பாரொன்ற வாழ பறைசாற்றி வெல்வார்.
ஏர்த்தொழில் மறவா ஊர்வாழ வாழ்வார்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

இராமேஸ்வரம்.

இராமநாதசுவாமி.

இராமநாத சுவாமியை
நாமமிட்டுச் சேவிக்க
சேமமே நாளெல்லாம்.
ஜெயமாகும் யாவுமே!
அமைதிக்கடல் கரையிலே
அமைந்திருக்கும் மேட்டிலே
ஈசனவர் பூசைக்கு--வணங்கி
எழுப்பிய இரமலிங்கம் 

அனுமனால் அகற்றிடா
ஆழ்வினை லிங்க சாமி
அன்று பூசித்த இராமசாமி
இனறும் பூசை இராமசாமி.
ஓடிக்கோடி தீர்ததங்கள்
உள்ளாடி வந்திட்டோம்!
ஓடாதோ துயரங்கள்!--அருளில்
ஒழியாதோ பகைமைகள்!

அலையாடும் கடலலையை
அடக்கி  வைத்த இராமசாமி.
நிலையில்லா என்னையும்
நின்றுதொழச் செய்தாயே.
ஈழமகள் சீதையை
இலங்கனிடம் மீட்கவே
போரிடப் புறப்பட்டு--ஈசனை
பூஜித்த இராம பூமி .

இராவணன் வீழ்ந்தானோ!
ஈழமகள் மீண்டாளோ!
பாலமிட்டும் தமிழோடு
பண்டுறவு கொள்வோமோ!
போராளி இராமசாமி
சீராள வந்த சாமி.
பாராண்ட இராமசாமி--தமிழ்
நாடாளும் நம்ம சாமி.

கொ.பெ.பி.அய்யா.

சுனாமியும் பதறும்.

சுனாமியும் பதறும்.

சூராவளியோ சுனாமியோ!
நேராதது திருச்செந்தூரோ!
சூரனை வதைத்த வேலுண்டு.
யாரது எதிர்ப்பார் நேர்கண்டு!

மரமாய் நின்ற சூரனை,
இருகூராய்  வகிர்ந்த வேல்வினை,.
கூர்முனை மிரட்டும் கதிர்வினை
நேரெதிர் கொள்ளுமோ சுனாமியும்.

செந்தூ ரென்றால் அஞ்சுமோ!
சேவலும் கொடியும் கெஞ்சுமோ!
மிறட்டும் உருட்டும் சீறலைகள்,
மீறுமோ மாறுமோ போரலைகள்.

எல்லை தொடவும கதறியே
உள்ளே ஓடும் பதறியே
அமைதி யாகியே அடங்கிடும்
அனுமதிக் காக ஒடுங்கிடும்

கவிஞர். கொ. பெ. பிச்சையா.





Sunday, 9 November 2025

செம்மொழி வாழ்த்து.

செம்மொழி வாழ்த்து.

முதலொலியாம் முத்தாம்; வளர்மொழியாம்; 
வாய்த்தயிரு, கண்ணாம், கருவிழியாம்,காலமாம்! 
கன்னல் இனிமை, வளமை, 
இளமை, வழமை 
வாழுந் தமிழாம்.
தனித்தச் சிறப்புத் தமிழ்.
பிறக்கும் பொழுதே 
பிறக்கும் ஒலியில் 
பிறக்கும் உறவும் அம்மாவாம். 
சிறப்பிதுபோல் உண்டோ 
பிறமொழி ஒன்றுமே சொல்லுக! 
கொண்டதும் செம்மொழி தமிழே!.

அறம்பொரு ளின்பம் 
அதன்பின் பெறும்பேறும்,
அன்னப் பெருமை 
அனைத்தும்திறமாய்,
அமைந்தும் வளமாய் 
அவனியில் வாழும் 
அருமைத் தமிழே சிறப்பு.
பன்மொழி ஏற்றுப் பதித்த இலக்கியங்கள், 
வண்பொலி வேற்றி வளர்ந்துமே தன்னிலைத் திண்ணமும் 
தேறியும் முன்னிலைப் போற்றியும் 
செந்தமிழ் வாழி வழுத்து!

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.

Friday, 7 November 2025

வண்டிக்காரன்

வண்டிக்காரன்.

நானொரு வண்டி நீயோ ஓட்டி!
என்னை எங்கே ஓட்டிப் போகிறாய்?
ஆன்மா உள்ளே இறையோ நீ!
ஆட்டிப் படைப்பவன் நீயோ!

பூட்டிய வண்டி நான் உடலாக
மாட்டிய காளைகள் உயிராக,
வண்டிக் காரன் ஓட்டுகிறாய்.
பயணம் எங்கே செலுத்துகிறாய்.

வண்டிக்காரா வண்டிக்காரா"
வண்டியை ஓட்டும் வண்டிக்காரா!
சண்டிக் காளை நானானுலும்,
சுண்டி ஓட்டுநீ வகையாக.

வண்டி மாடுகள் எப்படியோ!
வண்டிக் காரன் நீ தானே.!
சேரும் ஊரை சேர்ப்பது நீ
செல்லும் முறைமை பொறுப்பு.நீ

திமிரும் எருதுகள் விலகினால்
அமரும் உன்னிலை பிசகினால்
ஓட்டும் பாதை தவறினால் 
ஓட்டி நீதான் தவறிவிட்டாய்.

நல்லதும் கெட்டதும் நீ பொறுப்பு.
அல்லல் நேராதே ஓட்டு நீ!
விடைதான் என்ன இரகசியமோ--வண்டி
அடைவதும் ஆவதும் உன்வசமோ!

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Tuesday, 4 November 2025

தியாகத் திருநாள்

தியாகத் திரு நாள்

இஸ்மாயில் அம்சம் காணுங்கள்--அவன்
இஸ்ஸலாமிய வம்சந் தானுங்க ள்
அஸ்ஸலாமு அலைக்கம லாமுஙாகள்
அன்புடன்
அனைவர்க்கும் வணக்கம் 
சொல்லுங்க ள்

துல்ஹஜ்த் திங்களது பத்தாம் நாளில்
--அன்று
பக்ரூ ஈத் கொண்டாடும் திருநாளில்
அல்லாவின் கருணைக் கொடை நந்நாளில்
அனைவர்க்கும் பாய்களுக்கு வாழ்த்துக் கூறுங்கள்

நபித்தூதன் இப்ரஹிம் தவப் புதல்வன் 
இஸ்மாயில் அல்லாவின் கட்டளையாலே
தலை கொடுத்துத் தனை ஈந்தத் தியாகத் திருநாள்
நிறைந்த பக்தி மெச்சி விரைந்த அல்லா வாழி!

தூயபக்தி வாழ்த்தி அல்லா பக்ரு போது மென்றார்.
நேயமது மனிதகுணம் போற்றி நின்றார்
குர்பானிச் சமபந்திக் கூடி உண்ணுவோம் 
சர்வமும் சமமாகி வாழ்ந்திட லாமே.

அனைவரும் சகோதரரே!
அன்பு மொழிப் பாயே!
அப்பனென்றும் மாமனென்றும்
அத்தனையும் உறவானோம்.
சொந்தமான இரத்தங்களே!
பந்தமான உறவுகளே!
எந்தபேதம் இல்லாமலே
இந்த மண்ணில் வாழுவோமே!

தியாகத்தின் திருநாளே!
தேவனல்லாப் பெருநாளே!
இறைத்தூதன் இப்ரஹிமே!
இதயங்கொள் நந்நாளே!
மெக்காவுக்கும் மதினாவுக்கும்
முகமத் நபி யாத்திரையே,
இக்காலும் ஹஜ்பயணம்
இறைக்கடன் திருப்பயணம்.

இஹ்ஹாமை அணிந்திருப்பர்.
எல்லோரும் சமமென்பர்,
ஒற்றுமை விளக்கமாக
ஹஜ்ஜுக்குப் போய்வருவர்
கஃபாவைச் சுற்றிவந்தால்,
சம்சம் நீர் குடித்துவிட்டால்,
பிறவிப்பயன் பெற்றிடலாம்;
பிறவிக்கடல் நீந்திடலாம்.

ஹஜியாக ஆகிவிட்டால்,
கடமைகள் நிறைவுற்றால்,
அல்லாவின் அமைதியில்;
அவன் சரண் ஆகிடலாம்.

கவிஞர். கொ.பெ.பிச்சையா.

மெட்டு:இறைவனிடம் கையேந்துங்கள்

பின்குறிப்பு
பி.கு::பக்ரு--செம்மறியாடு.
இஹ்ஹாம--ஹஜ்பயணச் சீருடை.
கஃபா--மெக்கா புனிதத்தலம்.
சம்சம்--இஸ்மாயில் தோற்றுவித்தப் புனித நீரூற்று.
ஹஜி---ஹஜ் பயணம் சென்று வந்தவர்.



Saturday, 1 November 2025

குட்டிக் குட்டி குமரய்யா.

குட்டிக் குட்டி குமரய்யா!

குட்டிக் குட்டி குமரய்யா!
குன்றம் ஆடும் வேலய்யா!
அப்பனுக்குப் பாடம் சொன்ன,
சுட்டிப் பையா சுப்பையா.!

சிவனோட நெற்றிக்கண்ணில்,
அவதரித்த பாலய்யா!
சரவணப் பொய்கையில்,
அறுஉருவாய் ஆறுமுகா!

தேவர் குலம் காப்பதற்கே,
சிவப் பொரிகளாய் தாமரையில்,
சிவபாலன்கள் அறுவராக,
அவதரித்த கார்த்திகேயா!

கார்த்திகைப் பெண் சேர்ததணைத்த
கந்தா நீ கந்தய்யா.
கணபதிக்குப் பின் பிறந்த,
கந்தசாமி முருகய்யா

மயில் ஏறும் வாகனனோ!
மலை வாசப் பிரியவனோ!
மலை வாழும் குறவள்ளி,
மனம் நேச வேடுவனோ!

குறத்தி மகள் வள்ளி யையே!
விருத்தனாக வேடனாக,
காதல் வலை வீசி நீயே!
கலவை மணம் செய்த வேலா!

காதல் விளை ஆட்டமாடி,
வாதம் செய்து வம்பாடி,
அண்ணன் துணை கொண்டாடி 
கலாட்டா செய்த வேடன் நீ!

காதல் மணம் விரும்பியவா!
மோதல் குணம் நிறம்பியவா!
சிறைபிடித்து மணம் முடித்து,
புரட்சி மணம் புரிந்த முருகா!

காதலுக்கு வாழ்வளித்து,
கலப்பு மணம் ஆதரித்து,
தமிழுக்குப் பெருமை சேர்த்த,
அமுதன் நீ ஆண்டவா!

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Thursday, 23 October 2025

முருகன் திருமுகம்

செம்மான் திருடன்.

செம்மான் மகளைத் திருடிய திருடன்
பெம்மான் புகழைப் பாடி--முருகா
உன்னடி தொழ என்னடி தொலைந் தேன்
முன்னடி எண்ணிக் கிடந்தேன்...

சும்மா இருந் துன்னை நினைக்கவும்
சொல்லற மறந்து சுயமும்-- துறந்தும்
எண்ணம் முழுதும் உனையே போற்றி
திண்ணம் நீயெனத் தொழுதேன்.

முருகுன் திருமுகம் அழகுன் அறுமுகம்
உறுவினை ஒழிக்கும் இறையே--உனது
அறுபடை வீடு பெரும்படை யெடுக்கும்
தருணங்களே எதிர்வினை தாமே..

அருண கிரிக்கு அருளிய முருகா
கருணைக் கடலே கடம்பா--உனது
திருவடி சரணம் பெறுவருள் பெறவே
உறுபொருள் பேருபுகழ் நீயே!

தமிழென்ற சொல்லே அழகே அமுதே
கமழும் சந்தனம் சவ்வாதே--குளிர்
பன்னீர் திரவியம் மருக் கொழுந்தே
நன்னீர் நீராட்டு நாயகனே!

கூர்முன வேல்வினை யார் தாங்கும் 
நேர்வினை எதிரப் போர்வினை-- யாரோ!
யார்வினை கொள்வார் யாரவர் யாரோ
ஊழ்வினை அதுவே ஆகும்.

சூரனை வதைத்த சூரசம் காரா
போரினை முடித்த ஓராளா--வானவர்
தேவர் துயர்த் தீர்த்தவனே செந்தூரா
சேவற் கொடியுடை சிவபாலா.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.



Monday, 13 October 2025

ஏழையின் சிரிப்பில் இறைவன்

உள்ளம் ஒரு கோவில்.

திருப்பதி மலையப்பா.
திருவடி துணையப்பா.
இருப்பது நிலையப்பா,--நீ
ஏழையென் மனதப்பா.

உண்டியல் நிறைத்திட்டேன்
உன்னருள் நிரைந்திட்டேன்.
உண்டியும் கொடுத்திட்டேன்--என்
உளம் உன்னில் வைத்திட்டேன்.

அன்னமும் தானமும்
ஆயிரம் செய்திட்டேன்.
எண்ணம் மறந்திட்டேன்--என்றும்
உன்னையே நினைந்திட்டேன்.

தேரது இழுத்திட்டேன்
தெருவெல்லாம் பூவிட்டேன்.
ஊர் வாழ வேண்டிட்டேன்.--சொந்த
உறவுன்னைக் கொணடிட்டேன்.

பட்டுனக்குக் கட்டிட்டேன்.
பொட்டுனக்குத் தொட்டிட்டேன்.
பாட்டுன்னைப் பாடிட்டேன்-- நெஞ்சில்
ஏற்றுன்னைக் கூடிட்டேன்.

ஏழைக்கு உணவிட்டேன்.
வாழ்வுக்கு வழியிட்டேன்.
வறுமைக்கு முடிவிட்டேன்--ஏழை
சிரிப்பினில் உனைக் கண்டேன்.

ஊரெல்லாம் கூட்டிட்டேன்.
ஊர்கோலம் செய்திட்டேன்.
உளக்கோவில் கூரையிட்டேன்--உள்ளம்
நீ வாழ சீரிட்டேன்.

கோவிலும் கட்டிட்டேன்.
கோபுரமும் உயர்த்திட்டேன்.
பாட்டாளிக்குப் பாடு தந்தேன்--கொடும்
பசியாற்றி உன்னைக் கண்டேன்.

மலையேறி வந்திட்டேன்.
இறையுனைத் தேடிட்டேன்.
இறைஞ்சி பாடி அழைத்திட்டேன்--இருப்பு
இதயத்துள் கண்டிட்டேன்.

கொ.பெ.பிச்சை யா.














நான் யார்?

நான் யார்?

நான் யாரென என்னைத் தேடுகிறேன்
ஏன் பிறப்பென நானேப் பாடுகிறேன்
உண்டும் உறங்கத் தான் தானோ!
கொண்டதும் என்னக் கடன் தானோ!

இறைவா உன்னைக் கேட்டேனா?
இப்புவி படைக்கச் சொன்னேனா?
ன்னை யாரென நீ காட்டு
என்னக் கடனென நீ சூட்டு.

நாயையும் நீதான் படைத்தாயோ!
நானும் அப்படிப் பிறந்தேனோ!
ஏன்தான் என்னை அனுப்பி வைத்தாய்.?
வீண்தான் விளையா விதைதானோ!

எங்கெங்கோ ஏனோ அலைகிறேன்
இறைவனை நானோ தொழுகிறேன்.!
இன்னும் என்னைத் தேடுகிறேன்.
இறைவா ஏனிந்த இரகசியமோ!

சாதனை படைத்த எல்லோரும்
சரித்திரம்  நின்று வாழ்கிறார்
இறைவாநீ என்னை ஏன் படைத்தாய்.?
என்னை என்ன செய்ய வைத்தாய்?

இறைவன் போட்ட கணக் கிருக்கும்.
எல்லோ ருக்கும் எழுத்தி ருக்கும்.
போட்ட கணக்கைத் தீர்த்து வைப்பான்
ஆட்டம் அதன்படி ஆட்டி வைப்பான்.

வள்ளுவன் குறளில் வாழ்கிறான் 
சொல்லும் பொருள்களில் ஆள்கிறான்.
நானும் எங்கோ ஒளிந்துள்ளேன்
ஏனோ என்னை மறந்தாயோ!

பாரதியை மகா கவிஞர் என்றாய்..
காமராசரை கர்ம வீர ரென்றாய்.
வ. உ. சியைச் செம்மல் என்றாய்.
என்னை என்னென்று நீ நேர்ந்தாய்.


கவிஞர்.கொ.பெ.பிச்சையா.








.











மணிகண்டன் (ஐயப்ப சாமி)

மணிகண்ட சாமி ஐயப்பன்.

கழுத்தில் மணிமாலை,
மணிகண்ட சாமிக்கு.
அழகிய திருமுகம்,
ஐயப்பன் சாமிக்கு.
ஆணுக்கும் ஆணுக்கும்,
அவதாரம் ஐயப்பன்.
அரிகர புதல்வனாக,
தவக்கோலம் ஐயப்பன்.
அவன் வரலாறு படிபாபோம் நாமே
அவன் அருளதனை பெறுவோம் நாமே
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா

குழந்தை வேண்டி வருந்தியப் பந்தளன்,
அழுதிடும் குழந்தை  அரவம் கேட்டான்..
அருகிய அரசன் அள்ளி முகர்ந்தான். ஆனந்தம் பெருகி ஆசை முத்திட்டான்..
துள்ளிக் கொண்டாடி வீடு விரைந்தான்.
வெள்ளித் தங்கம் அள்ளிக் குவித்தான்.
அரண்மனை முழுக்க விழா எடுத்தான.
இருகரமள்ளி ஏழையர்குக் கொடுத்தான்


இரண் டாவது மனைவி பந்தள ராணி
வேண்டா வெறுப்பா கண்டாள் கோணி 
தன்குல வாரிசுத் தடங்கல் நினைந்தாள்
வன்ம வஞ்சனை மந்திரிக் கலந்தாள்.

வாராத் தலைவலி வந்ததோ!
வந்ததாக நடித்தாள்.வஞ்சகி.
பெறாத மகனான பிள்ளையை,
பலியிட முடித்தாள்.வஞ்சனை..
புலிப்பால் கேட்டொரு கதையை, தொடுத்தாள்.பாதகி சண்டாளி.
தாய்போல் பாசாங்கு செய்தாளே!
நோய்போல் கண்ணீர் பெய்தாலே..

எல்லாம் அறிவான் ஐயனோ!
இறைமகன் அவனோ.மெய்யனே!
ஏதும் வினவாமல் புறப்பட்டான்.
சாதுவாக மணிகண்டன் ஏகினான்.
கானகம் புகுந்தான் அரிகர புத்திரன்.
கண்டான் அரக்கியை எதிரே வர 
தேவர்கள் துயரை அறிந்தவ னாக
தூர்த்திடத் துணிந்தான்.அரிகரனே!

மணிகண்டன் மேலே அரக்கியோ
மகிசவள் பாய்ந்தாள்.செருக்கியே
வந்ததன் காரியம் முடித்திடவே
வதம் செய்து முடித்தான்.ஐயனே.
தேவர்கள் மகிழ்ந்து கொண்டாடி
தேவ ராட்டம் கூடிக் களித்தனர்.
தேவர்கள் தாமே புலிகளாகினர்.
புலிப்பால் கரந்தும் தாமே தந்தனர்

தேவர்கள் தலைவன் தேவேந்திரன் வந்து பணிந்து உள்ளம் நிறைந்தான்.
புலிப்பால் கொண்டு தந்தது கனிந்தான்.
புலியாகத் தானே ஐயனைச் சுமந்தார்.
அரண்மனை வரையும் சவ்வாரியாக
அவருடன் சூழப் புலிகள் சேனை
புலியிடை சவ்வாரி ஐயன் தானை.
புன்னகை செய்து பூரித்தான் மணியன்.

தாயா நடித்து நோயெனத் துடித்தவள்.
வாயில் கண்டு வாயடைத்து நின்றாள்.
புலிப்பால் கண்டு சலிப்பால் வெந்தாள்.
தன்தவ றுணர்ந்து தாளடி பணிந்தாள்.
அவதாரக் காரியம் ஆக்கி முடித்திட்டான்.
வானுலகு ஏகவும் வார்த்தை வந்தது.
சபரிமலைக் காடு தவக்கோல மேடு
கோவில் கட்ட ஆணை யிட்டுமே!
ஏவினான் அம்பால் குறியிட்டான் இடமே!

குறித்த இடத்திலே  பொறித்த விதமே
வடித்த கோவிலே சபரிமலைக் காடே!
அழகான இயற்கை அற்புதக் காட்சி
ஐயப்பன் அமர்வில் அவனது மாட்சி.
நலந்தேடு வர்க்கு வலக்கரம் காட்டுவான்
வளந்தரு சாமி குலக்காவல் ஐயப்பன்.
மலைப் பாதை நடக்க நோய்நொடி தீரும்
களைப்பதும் குறைய கஷ்டம் நீறும்.

சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா

கவிஞர். கொ. பெ. பிச்சையா.
.




 










Saturday, 11 January 2025

ஒன்னம்மாள் மந்திரம்

ஸ்ரீ வீர ஒன்னம்மாள் மந்திரம்
.(நூற்று எட்டு வரிகள்)

1)இமயம் பிளந்து எழுதீ பிறந்தாய்
உமையாள் மகளே ஒன்னம்மாள்.
அமையும் உலகின் அனுப்பர் முதல்வி
இமையாய்க் காவல் ஒன்னம்மாள்.

2)கங்கை யமுனை கரைகள் ஆண்டு
தங்கம் அறிந்த ஒன்னம்மாள்.
துங்கம் பரவி எங்கும் உலவும்
சிங்கத் தலைவி ஒன்னம்மாள்.

3)வீரம் விதைத்து தீரம் வளர்த்து
விந்தியம் தாண்டிய ஒன்னம்மாள்
ஆரம் படைத்து அனுப்பனை மணந்து
ஆட்சி அமைத்தாய் ஒன்னம்மாள்.

4)அட்டிய தொட்டன் அய்யன் மனையாள்
அம்மா அரசியே ஒன்னம்மாள்.
பற்றிய பலுத்தன் பகையினை வென்று
பாவையை மீட்டாய் ஒன்னம்மாள்.

5)சோளியோர் வம்சம் சுடர்கொடி ஆண்டாள்
மாலவி அம்சம் ஒன்னம்மாள்.
ஆயர்பாடி அனுப்பரின் கூட்டம்
தாயார் நீயே ஒன்னம்மாள்.

6)முள்ளால் கோட்டை பெல்லார் நாட்டை
சொல்லால் ஏற்றிய ஒன்னம்மாள்.
வல்லான் காட்டிய நல்லார் பாட்டை
கொள்ளோர் போற்றிய ஒன்னம்மாள்.

7)கன்னடம் கடந்தும் பன்நிலம் பரந்தும்
தென்நிலம் உறைந்தாய் ஒன்னம்மாள் .
கொண்டிடம் தமிழும் மன்றிடம் நிறைந்தும்
நின்றிடம் நிலைத்தாய் ஒன்னம்மாள்.

8)பகவான் அருளும் இகம்பெற பொருளும்
தகவாய் பெருக்கிய ஒன்னம்மாள்.
அகமும் புறமும் அன்பே உருக்கும்
மகிமைத் திறமும் ஒன்னம்மாள்.

9)செந்நிறக் குருதி தண்ணீராய் ஓடிய
பெண்ணாறு கண்டாய் ஒன்னம்மாள்.
தன்னறம் கொண்டும் பொன்கரம் மொண்டும்
உண்ணிறம் தந்தாய் ஒன்னம்மாள்.

10)வியந்தான் மன்னன் விசயபுரத்தான்
நயந்தான் சொல்லில் ஒன்னம்மாள்.
உயர்ந்தான் தோளன் தொட்டன் அவர்க்கு
முயன்றாய் ஆட்சி ஒன்னம்மாள்.

11)ஆநிரை மேய்த்து அட்டிகள் பெருக்கினர்
தானிறை அனுப்பர் ஒன்னம்மாள்.
வானிறை வையம் வல்லமை முறுக்கவும்
மேநிறை கொடுத்தாய் ஒன்னம்மாள்.

12)அடையா மழையால் அணைகள் உடைய
படையாய் அடைத்தாய் ஒன்னம்மாள்.
கொடையாய் நாட்டைக் கொடுத்தான் மன்னன்
விடையாய் விபூதி ஒன்னம்மாள்.

13)நாடெங்கும் நல்ல மழையும் பெய்ய
நல்வரவு கொள்ள ஒன்னம்மாள்.
காடெங்கும் கானம் அலையும் செய்ய
வீடெங்கும் வாழ்வே ஒன்னம்மாள்.

14)நல்லார் நன்மை பேரும் பெற்றாய்
பொல்லார் புகைய ஒன்னம்மாள்.
கொள்ளார் உண்மை கொற்றம் முன்னே
தில்லார் நிறுவினை  ஒன்னம்மாள்.

15)அதிகாரம் பெற்றார் அனுப்பர் எல்லாம்
கதியாவும் தந்தாய் ஒன்னம்மாள்.
சதிமோசம் செய்தான் சண்டாளன் மல்லன்
விதிதோசம் ஏற்றாய் ஒன்னம்மாள்;

16)சத்திய வழியில் லட்சியப் பணியில்
நித்தியம் வாழ்ந்தாய் ஒன்னம்மாள்
உத்தம நெறியில் நிச்சயத் துணிவில்
பற்றினை நெருப்பை ஒன்னம்மாள்.

17)வேல மரங்கள் நாலா புறங்கள்
வீழவும் முழங்கினை ஒன்னம்மாள்.
சூழத் தீயதில் ஞாலம் அதிரவே
சூளுரை செய்தாய் ஒன்னம்மாள்.

18)மேகம் கூடி சோகம் முழங்க
வேகம் சிவந்தாய் ஒன்னம்மாள்.
யாகம் இதுதான் பாகம் வழங்க
தேகம் துணிந்தாய் ஒன்னம்மாள்.

19)வானவர் பதைக்க ஏனென விளக்க
கோனவன் துடிக்க ஒன்னம்மாள்.
மானம் பெரிதென வாழ்பவர் அனுப்பர்
வீணிலை சபதம் ஒன்னம்மாள்.

20)சத்தியம் காக்கும் உத்தமர் அனுப்பர்
நிச்சயம் செய்தாய் ஒன்னம்மாள்.
குற்றங்கள் செய்யா குலமென்று அனுப்பர்
பெற்றினைத் தந்தாய் ஒன்னம்மாள்.

21) புதல்வன் பொட்டியன் பொறுப்பினை பெற்றதும்
முதல்வன் அட்டியனுடன் ஒன்னம்மாள்.
தகதக நெருப்பின் தங்கக் குதிரையில்
சுகமாய் அமர்ந்தாய் ஒன்னம்மாள்.

22)அக்கினிக் கருவில் அவதாரம் ஆகினை
அக்கினிப் பிறவி ஒன்னம்மாள்.
இக்குலம் அனுப்பர் நற்குலம் ஆக்கினை
மற்பலம் உரக்க ஒன்னம்மாள்.

23)உறுமி முழக்கம் பெருகி முழக்க
புரவி பறக்க ஒன்னம்மாள் .
வானம் தொடவும் வளரும் நெருப்பில்
வலம்வரும் தாயே ஒன்னம்மாள்.

24)வானோர் பூமழை வாரியும் இறைக்க
தானுடல் தவிர்த்த ஒன்னம்மாள்.
மாயோன் அவனே மன்னவன் தொட்டன்
நாயகி பறந்தாய் ஒன்னம்மாள்.

25)தொட்டன் இராயன் பட்டம் விளங்க
பெற்றனை ஆணை ஒன்னம்மாள்.
அனுப்பர் என்றால் அடையாளம் உறுமி
தனிப்புகழ் அருளினை ஒன்னம்மாள்.

26)கிளைகள் வகுத்து தழைகள் தொகுத்து
உறவுகள் இணைத்தாய் ஒன்னம்மாள்.
வரங்கள் வழங்கி வாக்கும் விளங்க
அறங்கள் அருளினை ஒன்னம்மாள்.

27)பரந்து வாழ்ந்தும் மரபு நிறைந்தும்
அறியும் தெய்வம் ஒன்னம்மாள்.
அனுப்பர் குலத்தின் ஆதாரம் அறிந்தும்
இணைக்கும் பலமே ஒன்னம்மாள்.
----------'----'''''''-------------'--''''"''"''''----------------
ஸ்ரீ வீர ஒன்னம்மாள் மந்திரம் (பாகம் இரண்டு)

ஜெய ஜெய ஒன்னு ஜெய ஜெய ஒன்னு
சுபமே அனுப்பரின் சொந்தமே வாழ்க!
ஆதி முதலாய் நீதி செய்த
அம்மா அனுப்பாள் ஒன்னம்மாள்.
மேதினில் ஆதியாய் வேதியம் கண்ட
மேலான குலத்தாள் ஒன்னம்மாள்.
ஜெய ஜெய ஒன்னு ஜெய ஜெய ஒன்னு
சுபமே அனுப்பரின் சொந்தமே வாழ்க!

வாழும் ஒழுக்கம் ஆளும் வழக்கம்
ஞாலம் பழக்கிய ஒன்னம்மாள்.
குடும்பம் கூட்டம் ஊரும் நாடும்
குலமுறை அமைத்தாய் ஒன்னம்மாள்.
ஜெய ஜெய ஒன்னு ஜெய ஜெய ஒன்னு
சுபமே அனுப்பரின் சொந்தமே வாழ்க!

சத்திய வாக்கு உத்தமம் ஆக்கும்
பத்தினித் தெய்வம் ஒன்னம்மாள்.
தொட்டது துலக்கும் இட்டது விளங்கும்
உத்தமித் தாயே ஒன்னம்மாள்.
ஜெய ஜெய ஒன்னு ஜெய ஜெய ஒன்னு
சுபமே அனுப்பரின் சொந்தமே வாழ்க!

அனுப்பர் என்றால் அறவோர் என்பார்
மனுகுலம் கண்டாய் ஒன்னம்மாள்.
அறம்பாடி என்பார் ஆக்கினை பெற்றார்
திறம்தேடி தந்தாய் ஒன்னம்மாள்.
ஜெய ஜெய ஒன்னு ஜெய ஜெய ஒன்னு
சுபமே அனுப்பரின் சொந்தமே வாழ்க!

ஜெய ஜெய மங்களம் ஜெய ஜெய மங்களம்
ஜெயமே அனுப்பர் உன்குலம்.
அனுப்பர் வாழும் அவனி எங்கும்
அமைதி நிலைக்க ஒன்னம்மாள்.
வளமும் வளர்ச்சியும் வல்லமை பயிற்சியும்
நலமும் எல்லாம் ஒன்னம்மாள்.
ஜெய ஜெய மங்களம் ஜெய ஜெய மங்களம்
ஜெயமே அனுப்பர் உன்குலம்.
ஜெய ஜெய மங்களம் ஜெய ஜெய மங்களம்
ஜெயமே அனுப்பர் உன்குலம்.

கொ.பெ.பி.அய்யா.

மந்திரமாய் இசைத்துப் பாட குல ஒற்றுமை
நன்மை உண்டாகும்..

கருத்து வரவேற்கப்படுகிறது.

ஓன்னம்மன்

எவ்வ ஒன்னுய மங்களா.

பாவா பாவா ஒன்னெவ்வ பாவா!
ஆவு நாமு அனுப்பரு பாவா!
மேனாடு இத்து கீநாடு பந்த
நீனோடு பேக்கு ஈனாநாடு தாயே!
பாவா பாவா ஒன்னெவ்வ பாவா!
ஆவு நாமு அனுப்பரு பாவா!

மங்களா ஆடி கம்பளா கூடி
பந்திரி நின்னோட குடியினா நோடி
அட்டி தொட்டய்யா ஒன்னு நிமிய
உட்டித மக்குலு பட்டி அனுப்பரு
ஒருடி நின்னனா கூங்குத்ர ஒந்தா
பரபேக்கு தாயே கொடபேக்கு சொகத்தா.

கெறனக் காத அரணுள்ள தெவ்வு
பறனக் கொடுவ்வா பாழத்தா அனுப்பரு.
துலுக்கரு ஒஞ்ச வாதாடி பந்த
அனுப்பரு குலதெவ்வு அரசாண்ட நீனு
அக்கினி தொலது சத்தியக் காத
பத்தினி தெவ்வு மங்களா நினிய.

சிந்து கங்க யமுனா நீனே
முந்து காவிரி பொன்னி நீனே!
பெண்ணை வைகை தாமிரபரணி
விந்திய இமய மேரும் நீனே!
இந்து வங்கா அரபி நீனே
முந்து தெவ்வு மங்களா நினிய!

கொ.பெ.பி.அய்யா.

Friday, 10 January 2025

திருப்பதி தேடுவார்.

இருப்பவர்க்கே இறைவனாம்.

திருப்பதி தேடிச்செல்வார்.
திருப்பணிகள் செய்திடுவார்.
வருமானத்தில் ஒளித்ததை
வாரி வாரிக் கொட்டிடுவார்.
-ஆனால்
தெருக் கோடி முருகனுக்கோ
ஒரு ரூபா கூட ஈய மாட்டார்.
திறந்த வெளி வெய்யிலில்
 உருக்குலையக் காயவிட்டார்.

உயிருக்குப் போராடுகிறான்.  கொடுமைக்கு உள்ளாகிறான்.
ஒருவேளைக் கஞ்சிக்கேழை 
சிறுமைப் பட்டு சீரழிகிறான்.
வயிற்றுப் பசிக்கொடுமையால் வறுமையில் வாடுகிறான்.
கொட்டடிக் கூலி வேலை
பட்டினியில் உழைக்கிறான்.
-ஆனால்
தயவில்லா எசமானன்,
இரக்கமிலாத் தனவந்தன்,
கொல்கத்தா காளிக்கவன்;
பட்டாடை போர்ததுகிறான்.

குடிப்பதற்கே நீரில்லை,
கோபாலுக்குப் பாலாபிசேகம்..
பாதையே ஏழைக்குப் 
பள்ளியறை அவமானம்.
பரந்தாமனுக்குத் தங்கத்தில்
துயிலூஞ்சல் சீதனம்.
-ஆனால்
அரசாங்கம் கடன் வாங்கும்,
அயல் நாட்டைக் கண்டு ஏங்கும்,
வருமானம் ஒளிக்கும் மேலோர்
வசதிக்குச் சாமி தூங்கும்.

கடவுளுக்கும் கையூட்டா?
கற்பகிரகம் தனிக்கோட்டா.
உடனடித் தரிசனம் 
கடவுளவர் கரிசனம்.
காசிருந்தால் பேசலாம் 
கடவுளையே காணலாம்
-ஆமாம்
இருப்பவனுக்கே இறைவனாம்
ஏழைக்கவன் தொலை தூரம்.
பணம் கொடுத்தால் பகவானே
பக்கம் வந்து அமருவான்.

உழைப்பவன் ஏழைக்காக 
உதவிடக்  கருணை இல்லை.
சிலையான பரமனுக்கு
அருள் செய்ய இரக்க மில்லை.
விலை தந்தால் வரம் தரும் 
நிலைமை என்ன கடவுளுக்கு!
பிழையாகப் பிழைப்பவனுக்கு
விலை போன சாமி எதற்கு?
-பாவம்
தலை வாசல் படி போல
நிலை கிடந்து பணி செய்யும்
வாழை போல் தலை பணிந்த
ஏழைக் கென்ன வாழ்வுண்டு.

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.


..




Thursday, 9 January 2025

யாமிருக்கப் பயமேன்.

யாமிருக்கப் பயமேன்?

ஏதும் செய்யத் தெரியவில்லல
வாதம் செய்ய நாதி இல்லை.
நாளும் பொழுது நகரவில்லை
வாழும் வகை புரியவில்லை.

என்னைச் சுற்றி ஆபத்து,
எத்தனையோ காத்திருக்கு.
உன்னையும் நினைப்பதற்கு
உள்ளம் ஏது வேலவா!

விலைவாசி ஏறுது
வெயில் போலக் காயுது.
வறுமை சுட்டு வாட்டுது.
வகை யென்ன கந்தைய்யா.

ஏறி நானே முயல்கிறேன்.
வாரிக் கீழே பாய்கிறேன்.
தோற்று நானே ஓய்கிறேன்.
தேற்று என்னைக் குமரனே!

செல்லும் வழி நெரிசலில்
சிக்கும் போக்கு வரத்தினில்
காலம் வீணேச் சாவதில்
கவலையாச்சே கடவுளே!

௨ரிமம் பெறாச் சிறுசுள்
ஓட்டுது பார் மோட்டார்கள்.
பத்திரமா உலவி வர
உயிருக் கென்ன நிச்சயம்.

சிவனே என்று கிடக்கவும்,
சேவை செய்ய மறுக்கவும்,
மூலை தேடிப் படுக்கவும்,
முடியவில்லை முருகனே!

உச்சி வெயில் தாக்குதே!
மச்சு வெப்பம் இறங்குதே!
விசிறி ஆட மறுக்குதே!
வேகிறேனே சாமியே!

வரவில் இல்லை மிச்சமே
உறவில் இல்லை பச்சமே
விதி திருத்தி வாழவே
கதியருள்க கடம்பனே!

யாமிருக்கப் பயமேன்
காமிக்கிறாய் கைகளேன்?
நீயிருப்பாய் சிலையாக.
நானென்ன நிலையோ சொல்.

கொ.பெ.பிச்சையா.




முன்னை முதல்வன்.

முன்னை முதல்வன்

முன்னை முதலோனே! 
மூஞ்சூர் வாகனனே!
அன்னைப் போல் பெண்தேடி
தண்ணீர்க் குளம் காப்போனே!
உன்னையும் தீண்ட வந்து 
ஊழ்வினை சனி தோற்றான்.
என்னை அஞ்சி சனி ஓட
இன்னை வா  கணபதியே!

வேழ முகத்தோனே
வேலவன் மூத்தோனே!
ஞால முதல்வனே 
ஞானப் பழத்தோனே!
வாழும் உயிர்க் கெல்லாம் வாழ்வளிக்கும் வள்ளலே!
ஏழைக்குடி வாசனே
இரங்கி யாருள் நேசனே!

செய்யுந் தொழில் யாவுமே 
சீர்மிகச் செய்வோனே.
வேண்டி யுன்னைத் தொடங்கினேன்
விளங்கச் செய் ஐங்கரனே!
நாயகற்கு  நாயகனே !
நலஞ் செய் விநாயகனே! 
தாயகனே வந்தருள்வாய் 
சேமம் நீ தந்தருள்வாய்.

உனைத்த் தொழப் போதுமே
அனைத் தருளும் கிட்டுமே.
அன்னை முதல் ஐயன் தந்த
அருளாசி கொட்டுமே.
குணமதிக் கோமானே
தினமுன்னைத் தொழுவேனே.
கணங்களின் பதியோனே.
கணபதியே அருள் செய்வீர்.

ஈசனின் மைந்தா உன்னை 
பூசித்தேன் நன்மையே!
வாசலில் நீ அமர்ந்தால், 
நாசங்கள் நாடாதே!
தோசமெனும் தொல்லைகள்
தோற்றோடும் எல்லைகள். 
வாசஞ் செய் வல்லோனே
நேச நெஞ்சன் இல்லோனே.

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.




அறுபடை வீடு.

சென்னை வாசி சிங்காரன்.

தென் பழனி போகாதார் 
வட பழனி தேடுங்கள்.
தங்க மயில் ஆண்டியவன்
தரிசனமும் நாடுங்கள்.

திருச்செந்தூர் காணாதார்
சிறுவாபுரி செல்லுங்கள்..
வெற்றி வேல் அருட்கோலம்-
பற்றி வளம் பெருக்குங்கள்.

மன்றம் அது திருக்குன்றம்
மணக்கோலம் பார்க்காதார்,
குன்றத்தூர் நாடுங்கள்.
கண்டு மனம் நிறையுங்கள்.

கழுகுமலை அறியாதாரா,
கந்தக்கோட்டம் வாருங்கள்.
அழகனவன் திருக்கோலம்-
அமைந்த புகழ் காணுங்கள்.

திருத்தணிகை மலையேறா,
வருத்தங்கள் தணித்தாறா,
திருமணம் செய்ய நலம்-,
பொருத்தமது திருத்தலம்.

பழம் உதிர்த்துப் பாட்டிக்கு
பாடம் சொன்ன சோலைபாரார்
குரோம்பேட்டை குமரக்குன்றம்
வரம்பெறும் திருமன்றம்.

அறுபடை வீடும் அங்கே,
அமைந்த பெருஞ் சென்னை.
எல்லாம் அது பெசனட் நகர்
எங்கேயும் அலையாதீர்.

கொ.பெ.பி.அய்யா.










காந்தியைக் கொண்டாடுவோம்

கொண்டாடுவோம்.

காந்திக்குக் கோவில் கட்டி
கற்பகிரகம் ஏற்றுவோம்.
மனிதரில் தெய்வமாக
மனிதகுலம்  வணங்குவோம்.

நாட்டுக்குழைத்த  நல்லோரை
நாட்டுவோம்  கோபுரத்தில்.
வானுயரக் கொடிமரத்தில்
வண்ணக் கொடியேற்றுவோம்.

விடுதலைத் திருவிழாவை
வீடுதோறுங்கொண்டாடுவோம்
வீதிகளில்  வடம் பிடித்து
பாரதத்தேர் இழுத்திடுவோம்.

பாரதியார் பாடல்களை
பசனையாகப் பாடுவோம்..
தாகூரின் படைப்புக்களை
கீதையாகக்.போற்றுவோம்.

பக்தருடைக்  கதருடுத்தி
பாதயாத்திரை செல்லுவோம்.
மறந்து போனதேசியத்தை
மறுபடியும்  சொல்லுவோம்.

கொ.பெ.பி.அய்யா.
.







தேவி பத்திரகாளி

நாடார் குல தேவி பத்திரகாளி !

கொல்லம் பரும்பூர் வாழும்
பத்திரகாளித் தாயே!வாழி!
நல்லருள் பெய்து குலம் வாழ வாழி!
நாடார் குல தேவி நீ வாழி!

வணிகத் தொழில் வாழ்வே வாழி! 
வணிக வாணிப குலத்தாய் வாழி!
குலதேவி ஆளும் நிலமே வாழி!
பலமே தமிழ் குடி நாடார் தாயே வாழி!

உனதருள் பெற்றோம் அம்மா வாழி!
உலகம் பரவினோம்உன்னால் வாழி!
எம்நிலை நந்நிலை  காக்குந்தாய் நீ!
தம்தர்மம் போற்றி வாழ்வே நீ வாழி

துலாக் கோல் வரம் தந்தாய் வாழி!
துணை நீயே உரம் ஈந்தாய் வாழி!
உலக விலாசம் நீ யெம்தாயே நீ!
குலமெம்மை  ஏற்றிய தாயே வாழி!

எம்மைத் தினமும் காக்கிறாய் வாழி
செம்மைக் கனமும் ஆக்கினாய் வாழி
ஞாலம் முழுதும் ஆளும் வாணிபம் நீ
தூலம் வலிமை தாயே நீ புகழே வாழி

செழுமை எம்மை சீராக்கி வாழி!
வளமை செம்மை வாழ் வாக்கி வாழி!
எளிமைத் தன்மை வலிமை ஆக்கி நீ!
நிலைமை உயர்வு செய்தாய் நீ வாழி!

அறம் தழைய வாழ் வளித்தாய் வாழி!
திறம் பெற வளம் கொடுத்தாய்வாழி!
உழைக்க உடல் நலம் உரமும் தந்தாய் நீ!
தழைக்கக் காக்க வரம் தந்தாய் நீ வாழி !

வாழ வைக்கும் அம்மா வாழி நீ!
தாள் பணிந்தோம் காக்க வாழி நீ!
எங்கெங்கு வாழ்ந் தும்அங்கங்கு நீ!
தங்கங்கும் வாழ்வே வழி நீ!வாழி நீ!

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.