Saturday, 11 January 2025

ஒன்னம்மாள் மந்திரம்

ஸ்ரீ வீர ஒன்னம்மாள் மந்திரம்
.(நூற்று எட்டு வரிகள்)

1)இமயம் பிளந்து எழுதீ பிறந்தாய்
உமையாள் மகளே ஒன்னம்மாள்.
அமையும் உலகின் அனுப்பர் முதல்வி
இமையாய்க் காவல் ஒன்னம்மாள்.

2)கங்கை யமுனை கரைகள் ஆண்டு
தங்கம் அறிந்த ஒன்னம்மாள்.
துங்கம் பரவி எங்கும் உலவும்
சிங்கத் தலைவி ஒன்னம்மாள்.

3)வீரம் விதைத்து தீரம் வளர்த்து
விந்தியம் தாண்டிய ஒன்னம்மாள்
ஆரம் படைத்து அனுப்பனை மணந்து
ஆட்சி அமைத்தாய் ஒன்னம்மாள்.

4)அட்டிய தொட்டன் அய்யன் மனையாள்
அம்மா அரசியே ஒன்னம்மாள்.
பற்றிய பலுத்தன் பகையினை வென்று
பாவையை மீட்டாய் ஒன்னம்மாள்.

5)சோளியோர் வம்சம் சுடர்கொடி ஆண்டாள்
மாலவி அம்சம் ஒன்னம்மாள்.
ஆயர்பாடி அனுப்பரின் கூட்டம்
தாயார் நீயே ஒன்னம்மாள்.

6)முள்ளால் கோட்டை பெல்லார் நாட்டை
சொல்லால் ஏற்றிய ஒன்னம்மாள்.
வல்லான் காட்டிய நல்லார் பாட்டை
கொள்ளோர் போற்றிய ஒன்னம்மாள்.

7)கன்னடம் கடந்தும் பன்நிலம் பரந்தும்
தென்நிலம் உறைந்தாய் ஒன்னம்மாள் .
கொண்டிடம் தமிழும் மன்றிடம் நிறைந்தும்
நின்றிடம் நிலைத்தாய் ஒன்னம்மாள்.

8)பகவான் அருளும் இகம்பெற பொருளும்
தகவாய் பெருக்கிய ஒன்னம்மாள்.
அகமும் புறமும் அன்பே உருக்கும்
மகிமைத் திறமும் ஒன்னம்மாள்.

9)செந்நிறக் குருதி தண்ணீராய் ஓடிய
பெண்ணாறு கண்டாய் ஒன்னம்மாள்.
தன்னறம் கொண்டும் பொன்கரம் மொண்டும்
உண்ணிறம் தந்தாய் ஒன்னம்மாள்.

10)வியந்தான் மன்னன் விசயபுரத்தான்
நயந்தான் சொல்லில் ஒன்னம்மாள்.
உயர்ந்தான் தோளன் தொட்டன் அவர்க்கு
முயன்றாய் ஆட்சி ஒன்னம்மாள்.

11)ஆநிரை மேய்த்து அட்டிகள் பெருக்கினர்
தானிறை அனுப்பர் ஒன்னம்மாள்.
வானிறை வையம் வல்லமை முறுக்கவும்
மேநிறை கொடுத்தாய் ஒன்னம்மாள்.

12)அடையா மழையால் அணைகள் உடைய
படையாய் அடைத்தாய் ஒன்னம்மாள்.
கொடையாய் நாட்டைக் கொடுத்தான் மன்னன்
விடையாய் விபூதி ஒன்னம்மாள்.

13)நாடெங்கும் நல்ல மழையும் பெய்ய
நல்வரவு கொள்ள ஒன்னம்மாள்.
காடெங்கும் கானம் அலையும் செய்ய
வீடெங்கும் வாழ்வே ஒன்னம்மாள்.

14)நல்லார் நன்மை பேரும் பெற்றாய்
பொல்லார் புகைய ஒன்னம்மாள்.
கொள்ளார் உண்மை கொற்றம் முன்னே
தில்லார் நிறுவினை  ஒன்னம்மாள்.

15)அதிகாரம் பெற்றார் அனுப்பர் எல்லாம்
கதியாவும் தந்தாய் ஒன்னம்மாள்.
சதிமோசம் செய்தான் சண்டாளன் மல்லன்
விதிதோசம் ஏற்றாய் ஒன்னம்மாள்;

16)சத்திய வழியில் லட்சியப் பணியில்
நித்தியம் வாழ்ந்தாய் ஒன்னம்மாள்
உத்தம நெறியில் நிச்சயத் துணிவில்
பற்றினை நெருப்பை ஒன்னம்மாள்.

17)வேல மரங்கள் நாலா புறங்கள்
வீழவும் முழங்கினை ஒன்னம்மாள்.
சூழத் தீயதில் ஞாலம் அதிரவே
சூளுரை செய்தாய் ஒன்னம்மாள்.

18)மேகம் கூடி சோகம் முழங்க
வேகம் சிவந்தாய் ஒன்னம்மாள்.
யாகம் இதுதான் பாகம் வழங்க
தேகம் துணிந்தாய் ஒன்னம்மாள்.

19)வானவர் பதைக்க ஏனென விளக்க
கோனவன் துடிக்க ஒன்னம்மாள்.
மானம் பெரிதென வாழ்பவர் அனுப்பர்
வீணிலை சபதம் ஒன்னம்மாள்.

20)சத்தியம் காக்கும் உத்தமர் அனுப்பர்
நிச்சயம் செய்தாய் ஒன்னம்மாள்.
குற்றங்கள் செய்யா குலமென்று அனுப்பர்
பெற்றினைத் தந்தாய் ஒன்னம்மாள்.

21) புதல்வன் பொட்டியன் பொறுப்பினை பெற்றதும்
முதல்வன் அட்டியனுடன் ஒன்னம்மாள்.
தகதக நெருப்பின் தங்கக் குதிரையில்
சுகமாய் அமர்ந்தாய் ஒன்னம்மாள்.

22)அக்கினிக் கருவில் அவதாரம் ஆகினை
அக்கினிப் பிறவி ஒன்னம்மாள்.
இக்குலம் அனுப்பர் நற்குலம் ஆக்கினை
மற்பலம் உரக்க ஒன்னம்மாள்.

23)உறுமி முழக்கம் பெருகி முழக்க
புரவி பறக்க ஒன்னம்மாள் .
வானம் தொடவும் வளரும் நெருப்பில்
வலம்வரும் தாயே ஒன்னம்மாள்.

24)வானோர் பூமழை வாரியும் இறைக்க
தானுடல் தவிர்த்த ஒன்னம்மாள்.
மாயோன் அவனே மன்னவன் தொட்டன்
நாயகி பறந்தாய் ஒன்னம்மாள்.

25)தொட்டன் இராயன் பட்டம் விளங்க
பெற்றனை ஆணை ஒன்னம்மாள்.
அனுப்பர் என்றால் அடையாளம் உறுமி
தனிப்புகழ் அருளினை ஒன்னம்மாள்.

26)கிளைகள் வகுத்து தழைகள் தொகுத்து
உறவுகள் இணைத்தாய் ஒன்னம்மாள்.
வரங்கள் வழங்கி வாக்கும் விளங்க
அறங்கள் அருளினை ஒன்னம்மாள்.

27)பரந்து வாழ்ந்தும் மரபு நிறைந்தும்
அறியும் தெய்வம் ஒன்னம்மாள்.
அனுப்பர் குலத்தின் ஆதாரம் அறிந்தும்
இணைக்கும் பலமே ஒன்னம்மாள்.
----------'----'''''''-------------'--''''"''"''''----------------
ஸ்ரீ வீர ஒன்னம்மாள் மந்திரம் (பாகம் இரண்டு)

ஜெய ஜெய ஒன்னு ஜெய ஜெய ஒன்னு
சுபமே அனுப்பரின் சொந்தமே வாழ்க!
ஆதி முதலாய் நீதி செய்த
அம்மா அனுப்பாள் ஒன்னம்மாள்.
மேதினில் ஆதியாய் வேதியம் கண்ட
மேலான குலத்தாள் ஒன்னம்மாள்.
ஜெய ஜெய ஒன்னு ஜெய ஜெய ஒன்னு
சுபமே அனுப்பரின் சொந்தமே வாழ்க!

வாழும் ஒழுக்கம் ஆளும் வழக்கம்
ஞாலம் பழக்கிய ஒன்னம்மாள்.
குடும்பம் கூட்டம் ஊரும் நாடும்
குலமுறை அமைத்தாய் ஒன்னம்மாள்.
ஜெய ஜெய ஒன்னு ஜெய ஜெய ஒன்னு
சுபமே அனுப்பரின் சொந்தமே வாழ்க!

சத்திய வாக்கு உத்தமம் ஆக்கும்
பத்தினித் தெய்வம் ஒன்னம்மாள்.
தொட்டது துலக்கும் இட்டது விளங்கும்
உத்தமித் தாயே ஒன்னம்மாள்.
ஜெய ஜெய ஒன்னு ஜெய ஜெய ஒன்னு
சுபமே அனுப்பரின் சொந்தமே வாழ்க!

அனுப்பர் என்றால் அறவோர் என்பார்
மனுகுலம் கண்டாய் ஒன்னம்மாள்.
அறம்பாடி என்பார் ஆக்கினை பெற்றார்
திறம்தேடி தந்தாய் ஒன்னம்மாள்.
ஜெய ஜெய ஒன்னு ஜெய ஜெய ஒன்னு
சுபமே அனுப்பரின் சொந்தமே வாழ்க!

ஜெய ஜெய மங்களம் ஜெய ஜெய மங்களம்
ஜெயமே அனுப்பர் உன்குலம்.
அனுப்பர் வாழும் அவனி எங்கும்
அமைதி நிலைக்க ஒன்னம்மாள்.
வளமும் வளர்ச்சியும் வல்லமை பயிற்சியும்
நலமும் எல்லாம் ஒன்னம்மாள்.
ஜெய ஜெய மங்களம் ஜெய ஜெய மங்களம்
ஜெயமே அனுப்பர் உன்குலம்.
ஜெய ஜெய மங்களம் ஜெய ஜெய மங்களம்
ஜெயமே அனுப்பர் உன்குலம்.

கொ.பெ.பி.அய்யா.

மந்திரமாய் இசைத்துப் பாட குல ஒற்றுமை
நன்மை உண்டாகும்..

கருத்து வரவேற்கப்படுகிறது.

ஓன்னம்மன்

எவ்வ ஒன்னுய மங்களா.

பாவா பாவா ஒன்னெவ்வ பாவா!
ஆவு நாமு அனுப்பரு பாவா!
மேனாடு இத்து கீநாடு பந்த
நீனோடு பேக்கு ஈனாநாடு தாயே!
பாவா பாவா ஒன்னெவ்வ பாவா!
ஆவு நாமு அனுப்பரு பாவா!

மங்களா ஆடி கம்பளா கூடி
பந்திரி நின்னோட குடியினா நோடி
அட்டி தொட்டய்யா ஒன்னு நிமிய
உட்டித மக்குலு பட்டி அனுப்பரு
ஒருடி நின்னனா கூங்குத்ர ஒந்தா
பரபேக்கு தாயே கொடபேக்கு சொகத்தா.

கெறனக் காத அரணுள்ள தெவ்வு
பறனக் கொடுவ்வா பாழத்தா அனுப்பரு.
துலுக்கரு ஒஞ்ச வாதாடி பந்த
அனுப்பரு குலதெவ்வு அரசாண்ட நீனு
அக்கினி தொலது சத்தியக் காத
பத்தினி தெவ்வு மங்களா நினிய.

சிந்து கங்க யமுனா நீனே
முந்து காவிரி பொன்னி நீனே!
பெண்ணை வைகை தாமிரபரணி
விந்திய இமய மேரும் நீனே!
இந்து வங்கா அரபி நீனே
முந்து தெவ்வு மங்களா நினிய!

கொ.பெ.பி.அய்யா.

Friday, 10 January 2025

திருப்பதி தேடுவார்.

இருப்பவர்க்கே இறைவனாம்.

திருப்பதி தேடிச்செல்வார்.
திருப்பணிகள் செய்திடுவார்.
வருமானத்தில் ஒளித்ததை
வாரி வாரிக் கொட்டிடுவார்.
-ஆனால்
தெருக் கோடி முருகனுக்கோ
ஒரு ரூபா கூட ஈய மாட்டார்.
திறந்த வெளி வெய்யிலில்
 உருக்குலையக் காயவிட்டார்.

உயிருக்குப் போராடுகிறான்.  கொடுமைக்கு உள்ளாகிறான்.
ஒருவேளைக் கஞ்சிக்கேழை 
சிறுமைப் பட்டு சீரழிகிறான்.
வயிற்றுப் பசிக்கொடுமையால் வறுமையில் வாடுகிறான்.
கொட்டடிக் கூலி வேலை
பட்டினியில் உழைக்கிறான்.
-ஆனால்
தயவில்லா எசமானன்,
இரக்கமிலாத் தனவந்தன்,
கொல்கத்தா காளிக்கவன்;
பட்டாடை போர்ததுகிறான்.

குடிப்பதற்கே நீரில்லை,
கோபாலுக்குப் பாலாபிசேகம்..
பாதையே ஏழைக்குப் 
பள்ளியறை அவமானம்.
பரந்தாமனுக்குத் தங்கத்தில்
துயிலூஞ்சல் சீதனம்.
-ஆனால்
அரசாங்கம் கடன் வாங்கும்,
அயல் நாட்டைக் கண்டு ஏங்கும்,
வருமானம் ஒளிக்கும் மேலோர்
வசதிக்குச் சாமி தூங்கும்.

கடவுளுக்கும் கையூட்டா?
கற்பகிரகம் தனிக்கோட்டா.
உடனடித் தரிசனம் 
கடவுளவர் கரிசனம்.
காசிருந்தால் பேசலாம் 
கடவுளையே காணலாம்
-ஆமாம்
இருப்பவனுக்கே இறைவனாம்
ஏழைக்கவன் தொலை தூரம்.
பணம் கொடுத்தால் பகவானே
பக்கம் வந்து அமருவான்.

உழைப்பவன் ஏழைக்காக 
உதவிடக்  கருணை இல்லை.
சிலையான பரமனுக்கு
அருள் செய்ய இரக்க மில்லை.
விலை தந்தால் வரம் தரும் 
நிலைமை என்ன கடவுளுக்கு!
பிழையாகப் பிழைப்பவனுக்கு
விலை போன சாமி எதற்கு?
-பாவம்
தலை வாசல் படி போல
நிலை கிடந்து பணி செய்யும்
வாழை போல் தலை பணிந்த
ஏழைக் கென்ன வாழ்வுண்டு.

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.


..




Thursday, 9 January 2025

யாமிருக்கப் பயமேன்.

யாமிருக்கப் பயமேன்?

ஏதும் செய்யத் தெரியவில்லல
வாதம் செய்ய நாதி இல்லை.
நாளும் பொழுது நகரவில்லை
வாழும் வகை புரியவில்லை.

என்னைச் சுற்றி ஆபத்து,
எத்தனையோ காத்திருக்கு.
உன்னையும் நினைப்பதற்கு
உள்ளம் ஏது வேலவா!

விலைவாசி ஏறுது
வெயில் போலக் காயுது.
வறுமை சுட்டு வாட்டுது.
வகை யென்ன கந்தைய்யா.

ஏறி நானே முயல்கிறேன்.
வாரிக் கீழே பாய்கிறேன்.
தோற்று நானே ஓய்கிறேன்.
தேற்று என்னைக் குமரனே!

செல்லும் வழி நெரிசலில்
சிக்கும் போக்கு வரத்தினில்
காலம் வீணேச் சாவதில்
கவலையாச்சே கடவுளே!

௨ரிமம் பெறாச் சிறுசுள்
ஓட்டுது பார் மோட்டார்கள்.
பத்திரமா உலவி வர
உயிருக் கென்ன நிச்சயம்.

சிவனே என்று கிடக்கவும்,
சேவை செய்ய மறுக்கவும்,
மூலை தேடிப் படுக்கவும்,
முடியவில்லை முருகனே!

உச்சி வெயில் தாக்குதே!
மச்சு வெப்பம் இறங்குதே!
விசிறி ஆட மறுக்குதே!
வேகிறேனே சாமியே!

வரவில் இல்லை மிச்சமே
உறவில் இல்லை பச்சமே
விதி திருத்தி வாழவே
கதியருள்க கடம்பனே!

யாமிருக்கப் பயமேன்
காமிக்கிறாய் கைகளேன்?
நீயிருப்பாய் சிலையாக.
நானென்ன நிலையோ சொல்.

கொ.பெ.பிச்சையா.




முன்னை முதல்வன்.

முன்னை முதல்வன்

முன்னை முதலோனே! 
மூஞ்சூர் வாகனனே!
அன்னைப் போல் பெண்தேடி
தண்ணீர்க் குளம் காப்போனே!
உன்னையும் தீண்ட வந்து 
ஊழ்வினை சனி தோற்றான்.
என்னை அஞ்சி சனி ஓட
இன்னை வா  கணபதியே!

வேழ முகத்தோனே
வேலவன் மூத்தோனே!
ஞால முதல்வனே 
ஞானப் பழத்தோனே!
வாழும் உயிர்க் கெல்லாம் வாழ்வளிக்கும் வள்ளலே!
ஏழைக்குடி வாசனே
இரங்கி யாருள் நேசனே!

செய்யுந் தொழில் யாவுமே 
சீர்மிகச் செய்வோனே.
வேண்டி யுன்னைத் தொடங்கினேன்
விளங்கச் செய் ஐங்கரனே!
நாயகற்கு  நாயகனே !
நலஞ் செய் விநாயகனே! 
தாயகனே வந்தருள்வாய் 
சேமம் நீ தந்தருள்வாய்.

உனைத்த் தொழப் போதுமே
அனைத் தருளும் கிட்டுமே.
அன்னை முதல் ஐயன் தந்த
அருளாசி கொட்டுமே.
குணமதிக் கோமானே
தினமுன்னைத் தொழுவேனே.
கணங்களின் பதியோனே.
கணபதியே அருள் செய்வீர்.

ஈசனின் மைந்தா உன்னை 
பூசித்தேன் நன்மையே!
வாசலில் நீ அமர்ந்தால், 
நாசங்கள் நாடாதே!
தோசமெனும் தொல்லைகள்
தோற்றோடும் எல்லைகள். 
வாசஞ் செய் வல்லோனே
நேச நெஞ்சன் இல்லோனே.

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.




அறுபடை வீடு.

சென்னை வாசி சிங்காரன்.

தென் பழனி போகாதார் 
வட பழனி தேடுங்கள்.
தங்க மயில் ஆண்டியவன்
தரிசனமும் நாடுங்கள்.

திருச்செந்தூர் காணாதார்
சிறுவாபுரி செல்லுங்கள்..
வெற்றி வேல் அருட்கோலம்-
பற்றி வளம் பெருக்குங்கள்.

மன்றம் அது திருக்குன்றம்
மணக்கோலம் பார்க்காதார்,
குன்றத்தூர் நாடுங்கள்.
கண்டு மனம் நிறையுங்கள்.

கழுகுமலை அறியாதாரா,
கந்தக்கோட்டம் வாருங்கள்.
அழகனவன் திருக்கோலம்-
அமைந்த புகழ் காணுங்கள்.

திருத்தணிகை மலையேறா,
வருத்தங்கள் தணித்தாறா,
திருமணம் செய்ய நலம்-,
பொருத்தமது திருத்தலம்.

பழம் உதிர்த்துப் பாட்டிக்கு
பாடம் சொன்ன சோலைபாரார்
குரோம்பேட்டை குமரக்குன்றம்
வரம்பெறும் திருமன்றம்.

அறுபடை வீடும் அங்கே,
அமைந்த பெருஞ் சென்னை.
எல்லாம் அது பெசனட் நகர்
எங்கேயும் அலையாதீர்.

கொ.பெ.பி.அய்யா.










காந்தியைக் கொண்டாடுவோம்

கொண்டாடுவோம்.

காந்திக்குக் கோவில் கட்டி
கற்பகிரகம் ஏற்றுவோம்.
மனிதரில் தெய்வமாக
மனிதகுலம்  வணங்குவோம்.

நாட்டுக்குழைத்த  நல்லோரை
நாட்டுவோம்  கோபுரத்தில்.
வானுயரக் கொடிமரத்தில்
வண்ணக் கொடியேற்றுவோம்.

விடுதலைத் திருவிழாவை
வீடுதோறுங்கொண்டாடுவோம்
வீதிகளில்  வடம் பிடித்து
பாரதத்தேர் இழுத்திடுவோம்.

பாரதியார் பாடல்களை
பசனையாகப் பாடுவோம்..
தாகூரின் படைப்புக்களை
கீதையாகக்.போற்றுவோம்.

பக்தருடைக்  கதருடுத்தி
பாதயாத்திரை செல்லுவோம்.
மறந்து போனதேசியத்தை
மறுபடியும்  சொல்லுவோம்.

கொ.பெ.பி.அய்யா.
.







தேவி பத்திரகாளி

நாடார் குல தேவி பத்திரகாளி !

கொல்லம் பரும்பூர் வாழும்
பத்திரகாளித் தாயே!வாழி!
நல்லருள் பெய்து குலம் வாழ வாழி!
நாடார் குல தேவி நீ வாழி!

வணிகத் தொழில் வாழ்வே வாழி! 
வணிக வாணிப குலத்தாய் வாழி!
குலதேவி ஆளும் நிலமே வாழி!
பலமே தமிழ் குடி நாடார் தாயே வாழி!

உனதருள் பெற்றோம் அம்மா வாழி!
உலகம் பரவினோம்உன்னால் வாழி!
எம்நிலை நந்நிலை  காக்குந்தாய் நீ!
தம்தர்மம் போற்றி வாழ்வே நீ வாழி

துலாக் கோல் வரம் தந்தாய் வாழி!
துணை நீயே உரம் ஈந்தாய் வாழி!
உலக விலாசம் நீ யெம்தாயே நீ!
குலமெம்மை  ஏற்றிய தாயே வாழி!

எம்மைத் தினமும் காக்கிறாய் வாழி
செம்மைக் கனமும் ஆக்கினாய் வாழி
ஞாலம் முழுதும் ஆளும் வாணிபம் நீ
தூலம் வலிமை தாயே நீ புகழே வாழி

செழுமை எம்மை சீராக்கி வாழி!
வளமை செம்மை வாழ் வாக்கி வாழி!
எளிமைத் தன்மை வலிமை ஆக்கி நீ!
நிலைமை உயர்வு செய்தாய் நீ வாழி!

அறம் தழைய வாழ் வளித்தாய் வாழி!
திறம் பெற வளம் கொடுத்தாய்வாழி!
உழைக்க உடல் நலம் உரமும் தந்தாய் நீ!
தழைக்கக் காக்க வரம் தந்தாய் நீ வாழி !

வாழ வைக்கும் அம்மா வாழி நீ!
தாள் பணிந்தோம் காக்க வாழி நீ!
எங்கெங்கு வாழ்ந் தும்அங்கங்கு நீ!
தங்கங்கும் வாழ்வே வழி நீ!வாழி நீ!

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.




எங்கே தேடுவேன்!

எங்கே தேடுவேன்?

எங்கே தேடுவேன் தாயை
எங்கே தேடுவேன்?
பத்திர காளி  அவளை
எங்கே தேடுவேன்.
நல்ல குலம் ஆளும் 
நாடார் காவல் தெய்வம்
குலதேவி  பத்திரகாளியை
கொல்லம் பரும்பில் காண்கிறேன்

அறிவாய் அமர்ந்து ஆட்சி செயயும்,
அன்பாய் கனிந்து ஆனந்தம் அளிக்கும்.
நாடார் பேணி நல்குலம் காக்கும்
நல்ல தெய்வம் பத்திரகாளியை
கொல்லம் பரும்பில் காணுங்கள்.

அருவமாகவே ஆற்றல் படைக்கும்.
இறைவியாகவ காத்து அருளும்.
ஐந்தின் ஆளுமை அவளே நடத்தும்.
ஆளும் பத்திரகாளித் தேவியை
வாழ வாழ்த்திப் பாடுங்கள்.

எண்ணம் ஏவல் எல்லாம் தாயே!
ஈவு இரக்கம் சொல்லும் காளியே!
உண்மை ஊக்கம் உணர்வின் தேவியே
உயர்வின் ஆக்கம் பத்திர காளியே!

ஒழுகும் முறையும் ஓதும் நலமே.
பழகும் விதமும் பரிந்திடும் குலமே.
அழகும் ஆய்ந்து தேர்ந்திடும் வளமே.
அருளும் தெய்வம் பத்திரகாளியே!

வாழ்வியம் பற்றிட அம்மா உதவுவாள்.
வாழ்வும் காத்திட பாதையும் காட்டுவாள்
ஆளுமை மேம்பட செம்மை யாக்குவாள்.
அனைத்தும் அவளே அன்னை பத்திரகாளியே!

புத்தியும் சித்தியும் சத்தியம் அருள்வாள்
சக்தியும் செயலில் உத்தமம் தருவாள்
முக்திக்கு வழியும்  நிச்சயம் செய்வாள்
வித்தக மனதே தானாவாள் பத்திரகாளி.

ஆன்மா அவள்தான் தானென உள்ளாள்
ஆழ்ந்தே உள்ளம் தானெனக் கொள்வாள்
தங்கும் கொல்லம் பரும்பில் வாழும்
பங்கம் வெல்வாள் பத்திரகாளி நாளும்.

கொ.பெ.பி.அய்யா.

தொழுவது கடன்.

தொழுவது கடனே!

இறந்தும் கடந்தவன்
இறைவன் ஆகிறான்.
ஆண்டும் கடந்தவன்
ஆண்டவன் ஆகிறான்.
துறந்தும் கடந்தவன்
தெய்வம் ஆகிறான்.
பாவம் கடந்தவன்
பகவான் ஆகிறான்.

பறந்தும் கடக்குமுன்
பாந்தவன் ஆகலாம்.
கரந்தும் கடந்த பின்
கடவுளும் ஆகலாம்.
புறந்தும் கடந்தானை
புவியினிற் தேடாமல்
மறந்தும் கடந்தானை
மனதினிற் தேடுவோம்.

கடந்தும் கடந்தவர்.
கடமையிற் படர்ந்தவர்.
நடந்தும் நடந்தவர்
நன்மையே தொடர்ந்தவர்
அறிந்தும் அறிந்தவர்
அருமைகள் புரிந்தவர்
தெரிந்தும் தெரிந்தவர்
தெய்வநிலை செறிந்தவர்.

மன்னுலகு உய்யவே!
மனிதநிலை செய்யவே!
எண்ணிய எய்யவே!
திண்ணிலைத் துய்யவே!
பண்ணிய மாந்தரெலாம்
பின்னவர்க்குக் கடவுளாம்.
நண்ணிடும் நலமெல்லாம்
அன்னவரின் அருட்களாம்.

கடவுட்கள் எத்தனை?
கணக்கில்லை அத்தனை!
இடமது இதயங்கள்
ஏற்றிடும் தெய்வங்கள்.
கடந்த நற் கருணைகள்
கிடந்தவர் உட் பெருக
தடமான ஆலயங்கள்
கடனாகத் தொழுவுங்கள்.

அம்மையும் அப்பனும்
நாம் காணுந் தெய்வமாம்.
செம்மையாம் சேவையும்
உண்மையாய்ச் செய்திடுவோம்.
நன்றியை மறந்தாரும்
நாயினுங் கேவலமாம்.
பாவமாம் பிறவிக்கடல்
போதும் மீண்டும் 
வேண்டாம் வேண்டாம்.

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.



Thursday, 2 January 2025

இயற்கை வாழ்த்து.

ஒரு குயிலின் குரல்இயற்கை வாழ்த்து.



இயல்பாம் இயக்கம் இயற்கை யுனது
செய்பருவச் சீரே சிறப்பு.

 
பருவங்கள் சீரே சமமானால் சிறப்பாகும்.
----------------------------------------------------------------------------------------------------------------
அறிவினிற் தேடல் செயற்கை வியப்பு
அனைத்தும் இயற்கை யளிப்பு.

பொருள்:மனிதன் தன் அறிவால் தேடிக்காணும் பயன்தரும்
செயற்கை விந்தை விளைவுகள் அனைத்தும் இயற்கை
அளித்தக் கொடையே!
----------------------------------------------------------------------------------------------------------------
இயற்கை யருளும் செயற்கைப் பயன்கள்  
நயக்க அணிசெய் மலர்.

பொருள்:நமக்குக் கிடைத்துள்ள அறிவியல் கண்டுப் பிடிப்புக்கள்
எல்லாம் இயற்கைக்கு நாம் அணிவிக்கும் நன்றி மலர்கள்.
----------------------------------------------------------------------------------------------------------------------
கோபத்துக் காளாகாத் தேடல் முடிவலோ
பாவங்கள் இல்லாப் பயன்

பொருள்: இயற்கையின் கோபத்திற்கு ஆளாகாமல் மனிதன்
ஆய்ந்து தேடும் பயன்களால் எந்தக் குற்றமும் நேராது.
----------------------------------------------------------------------------------------------------------------
குமுறலுஞ் சீறலும் சீண்டா(து) அறிவால்
அமுதங் கடைவம் நலம்.

பொருள்:இயற்கையின் இயல்புக்கு மாறான  அறிவியல்
தேடல்களை மேற்கொண்டு அதனைச்சீண்டிவிட்டு
அதன் குமுறலை விளைவிக்காமல் அதனிடம்
உயிர் காக்கும் அமுதம் போன்ற பொக்கிசங்களைத்
தேடுவோம்.
--------------------------------------------------------------------------------------------------------------
செயற்கை விளைந்திடும் சீரியப் பொறிகள்
இயற்கை யருளியக் கொடை.

பொருள்:தேடல் அறிவால் செயற்கை விளைத்த அற்புதக்
கருவிகள் எல்லாம் இயற்கை நமக்களிதக் கொடை.
----------------------------------------------------------------------------------------------------
வானத்துத் தேடல்  வளர்ஞானக்  கூடல்எம்
மானவர்  பெற்ற கொடை

பொருள்: வானில் மேற்கொள்ளும் ஆய்வுகளும் அதற்கான
ஞானமும் நாளுக்கு நாள் கூடுவதும் வானம் தன்னுள் ஒளித்து
வைத்துள்ள அளவிடமுடியாச்செலவங்களே!
--------------------------------------------------------------------------------------------------------------------
இயற்கை கெடுக்கா  இயல்புகள் ஊக்கும்
செயற்கையால் சேர்ப்போம்  சிறப்பு.

பொருள்:நாம் இயற்கையைப் பகைத்துக் கொள்ளாமல்
இன்னும் பல பல உலகங்களைக் கண்டறிவோம்.
-------------------------------------------------------------------------------------------------------------------
காப்போம் இயற்கையைக் கண்ணென,  நம்மையும்
காப்ப (து) இயற்கையே காண்!!

பொருள்:வளங்கள் நிறைதுள்ள இயற்கையை நாம்
காப்பது நம் பொறுப்பானால்.இயற்கை நம்மைக் காக்கும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
கண்ட  பலன்களைக்  காணிக்கை  ஆக்கியற்கை
தண்டனை  தாரா(து  அறி

பொருள்:நாம் நம் அறிவால் இயற்கையில் தேடிக்கண்ட
அத்தனை செயற்கைப் படைப்புக்களையும் இயற்கை
எனும் இயற்கைக்கு காணிக்கையாகப் படைப்போம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
கொ.பெ.பி.அய்யா.

-------------------------------------------------------------------------------------------------------------------------

Wednesday, 1 January 2025

தமிழே அழகே முருகா.

தமிழே அழகே வாராய்.

செந்தூர் வாழும் வேலவனே!
சிந்தை நிறைந்த மால்மருகா!
சிவனே தந்த செல்லமே-தமிழ்
தவனே பார்வதி புதல்வா.

தமிழ்க் குடிக் காக்கும் முருகா!
திருச் செந்தூர் ஆக்கின இறைவா!
சூரனை வென்ற வீரா—தமிழ்
போராளி நீயே தலைவா.!

வேலினைக் கையிற் கொண்டு
விழிபன் னிரண்டிலுங் கண்டு
தமிழினம் காத்து அருளவே—தமிழ்
குலமென மண்ணில் வாழவே.

தாமரை மலர்கள் ஆறாய்,
மலர்ந்தாய் சிவனின் கூறாய்.
மொத்தம் அள்ள கார்த்திகை—தமிழ்
கந்தன் நீயும் அவதரித்தாய்.

இழிவெனச் சாதி இல்லையே
மலைமகள் மணந்த சுப்பையா.
வேடன் விருத்தன் ஆகவே—தமிழ்
நாடனே காட்சி அழகனே.

தமிழே அழகே வாராய்.
அமுதே உயிரே வாராய்
முதலே மொழியே நீயே–தமிழ்
ஆசான் அரசே வாராய்.

கொ.பெ.பி.அய்யா.