Sunday, 30 November 2025

இராமேஸ்வரம்.

இராமநாதசுவாமி.

இராமநாத சுவாமியை
நாமமிட்டுச் சேவிக்க
சேமமே நாளெல்லாம்.
ஜெயமாகும் யாவுமே!
அமைதிக்கடல் கரையிலே
அமைந்திருக்கும் மேட்டிலே
ஈசனவர் பூசைக்கு--வணங்கி
எழுப்பிய இரமலிங்கம் 

அனுமனால் அகற்றிடா
ஆழ்வினை லிங்க சாமி
அன்று பூசித்த இராமசாமி
இனறும் பூசை இராமசாமி.
ஓடிக்கோடி தீர்ததங்கள்
உள்ளாடி வந்திட்டோம்!
ஓடாதோ துயரங்கள்!--அருளில்
ஒழியாதோ பகைமைகள்!

அலையாடும் கடலலையை
அடக்கி  வைத்த இராமசாமி.
நிலையில்லா என்னையும்
நின்றுதொழச் செய்தாயே.
ஈழமகள் சீதையை
இலங்கனிடம் மீட்கவே
போரிடப் புறப்பட்டு--ஈசனை
பூஜித்த இராம பூமி .

இராவணன் வீழ்ந்தானோ!
ஈழமகள் மீண்டாளோ!
பாலமிட்டும் தமிழோடு
பண்டுறவு கொள்வோமோ!
போராளி இராமசாமி
சீராள வந்த சாமி.
பாராண்ட இராமசாமி--தமிழ்
நாடாளும் நம்ம சாமி.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment