நான் யார்?
நான் யாரென என்னைத் தேடுகிறேன்
ஏன் பிறப்பென நானேப் பாடுகிறேன்
உண்டும் உறங்கத் தான் தானோ!
கொண்டதும் என்னக் கடன் தானோ!
இறைவா உன்னைக் கேட்டேனா?
இப்புவி படைக்கச் சொன்னேனா?
என்னை யாரென நீ காட்டு
என்னக் கடனென நீ சூட்டு.
நாயையும் நீதான் படைத்தாயோ!
நானும் அப்படிப் பிறந்தேனோ!
ஏன்தான் என்னை அனுப்பி வைத்தாய்.?
வீண்தான் விளையா விதைதானோ!
எங்கெங்கோ ஏனோ அலைகிறேன்
இறைவனை நானோ தொழுகிறேன்.!
இன்னும் என்னைத் தேடுகிறேன்.
இறைவா ஏனிந்த இரகசியமோ!
சாதனை படைத்த எல்லோரும்
சரித்திரம் நின்று வாழ்கிறார்
இறைவாநீ என்னை ஏன் படைத்தாய்.?
என்னை என்ன செய்ய வைத்தாய்?
இறைவன் போட்ட கணக் கிருக்கும்.
எல்லோ ருக்கும் எழுத்தி ருக்கும்.
போட்ட கணக்கைத் தீர்த்து வைப்பான்
ஆட்டம் அதன்படி ஆட்டி வைப்பான்.
வள்ளுவன் குறளில் வாழ்கிறான்
சொல்லும் பொருள்களில் ஆள்கிறான்.
நானும் எங்கோ ஒளிந்துள்ளேன்
ஏனோ என்னை மறந்தாயோ!
பாரதியை மகா கவிஞர் என்றாய்..
காமராசரை கர்ம வீர ரென்றாய்.
வ. உ. சியைச் செம்மல் என்றாய்.
என்னை என்னென்று நீ நேர்ந்தாய்.
கவிஞர்.கொ.பெ.பிச்சையா.
.
No comments:
Post a Comment