உனக்குள்ளே தேடுக
தெய்வத்தை எங்கே நீ
தேடி தேடி அலைகிறாய்---அவன்
உனக்குள்ளே இருப்பதை
உணர்ந்திட்டால் உள்ளொளிர்வான்.
தெய்வம் நீ என்றுணர்
தேடி அவன் உனக்குள் வருவான்.
இதயத்தை சுத்தம் செய் இறைவனுக்கு கோவில் வை.
ஏழையின் அம்சமாய் இறைவனவன் தெரிகின்றான்.
ஏழைக்கு உதவிடத்தான் இறைவனாய்ச் சிரிக்கின்றான்.
தானத்தில் சிறந்தது அன்னதானம் எனறறிவீர்.
ஏனத்தை நிறைத்திட்டால்
இறைவனே உள்ளருள்வான்.
தாடியும் மொட்டையும் வளர்த்தலும் மழித்தலும்
தேடியிடும் காணிக்கையும்
தெய்வங்கள் வேண்டாது.
கோடியில் இலட்சம் பேர்
கோவில் முன் கோலம் பார்.
தேடித் தேடி அவர் நிலை தேரச்செய்வீர் இறைப்பணி
கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment